(எம் எச் எம் அ
ன்வர்)
காத்தான்குடி மீடியா போரத்தின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு காத்தான்குடி மெரைன் ரைவ் கடற்கரை வளாகத்தில் அதன் தலைவர் மௌலவி எஸ் எம் எம் முஸ்தபா (பலாஹி) தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது
காத்தான்குடி பிரதேச ஊடகவியலாளர்கள் போரத்தின் உறுப்பினர்கள் பிரதேச கலைஞர்கள் கலந்து தங்கள் திறமைகள் மற்றும் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தியதுடன் தங்களுக்கிடையே புரிந்துணர்வையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்
மேற்படி நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ எல் எம் என் முபீன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் எம் ஜ அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டதுடன் நிகழ்வுக்கான அனுசரணை வழங்கிய எச் எம் தஸ்லீம் மற்றும் ஏ எல் மீரா சாஹிப் ஆகியோர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்
நிகழ்வில் சிறப்பம்சமாக கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கவிதை நாடகம் பாடல் நகைச்சுவை அம்சங்கள் விளையாட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது






