இம்முறை ரூபவாஹினி – நேத்ரா அலைவரிசையில் ஹஜ்ஜுப் பெருநாள் தினமான திங்கட்கிழமை (12-09-2016) மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
'தியாகத் தென்றல்' என்னும் தலைப்பில் விசேட ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கின்றன.
இர்பான் மௌலானா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிகளில்
மௌலவி ஹஸன் பரீத் அவர்கள் வழங்கும் ஹஜ் கடமைகள் பற்றிய விளக்கம்.
நாகூர் E.M. ஹனீபா பாடல்.
சிறுவர் நிகழ்ச்சிகள்.
மாவனெல்லை ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா பெண்கள் அறபிக் கல்லூரி மாணவிகளின் கலந்துரையாடல்.
'இன்னுமொரு புனித யாத்திரை' என்னும் இஸ்லாமிய நாடகம்.
'கிஸ்வா' என்னும், கஃபதுல்லாஹ்வை போர்த்தும் துணியின் தயாரிப்பு விபரணம் ஆகியவற்றோடு,
Knowledge Box ஊடக அமைப்பின் தயாரிப்பான கலந்துரையாடலும்,
ஹஜ்ஜுப் பெருநாள் விசேட கவி அரங்கும் இடம்பெறுகின்றன.
கவி அரங்கத் தலைமை: தமிழ்த் தென்றல் அலிஅக்பர் மற்றும்
கவிஞர்கள்: கலாபூஷணம் பீர் முஹம்மது
ஈழத்து நூன் ஏ.எம்.எம். நிலாம்
நளீமிய்யா மாணவர் பைஸல் பரீத் ஆகியோர்.
காயல் ஷேக் முஹம்மது மற்றும் உள்ளுர் பாடகர்களின் இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய நிகழ்ச்சியை ஆ.ர்.ஆ. ஜெஸ்மின் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் பணிப்பாளர் முஹம்மது யூனுஸ் அவர்களின் வழிகாட்டலில் மபாஹிர் மௌலானா, முபாறக் மொஹிதீன், ஹஸாரியா பேகம், ஊ.டீ.ஆ. ஷியாம் ஆகியோர் தயாரித்து வழங்குகிறார்கள்.

