எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். எங்களுடைய மரணத்திற்குப் பின்னரும் அது நிலைத்து நிற்கும் - அஷ்ஷெய்க் எம். எச். எம். யூசுப் முப்தி

Written By avathani Media Network on Tuesday, September 27, 2016


(இக்பால் அலி)

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இமாம்கள் பெரும் பெரும் கிதாபுகளை எழுதவும் தொகுக்கவும் முடியும் என்று இருந்தால் நாங்களும் ஏன் எழுத முடியாது. நாங்களும் ஓயாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் எழுத்தாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் மாற வேண்டாம். எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். எங்களுடைய மரணத்திற்குப் பின்னரும் அது நிலைத்து நிற்கும் என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் எம். எச். எம். யூசுப் முப்தி தெரிவித்தார்

நப்றாஸ் ஹனிபா, எச். எம். தாஜ் ஹஸன், எம். எச். எம். அம்ஜத், என். பீ. எம். உமைர், எம். ஏ. அப்துல்லாஹ் ஆகியவர்கள் இணைந்து எழுதிய நற்பணியில் நான்கு தசாப்தங்களைத் தாண்டிய அரபுக் கல்லூரிகள், கண் குளிரச் செய்யும் குழந்தைகள், இறைத் தூதருடன் ஒருநாள் ஆகிய மூன்று நூல்களின் நூல் வெளியீட்டு விழா 25-0-9-2016 ஞாயிற்றுக் கிழமை கடுகன்னாவ பியெர்ல் ரிச். ஹோட்டலில ;நடைபெற்றது. அக்குரணை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாஹ் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ, ஸாதிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் எம். எச். எம். யூசுப் முப்தி சிறப்பு அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

அல்லாஹ் த ஆலா எந்த மனிதனையும் வீணாகப் படைத்ததில்லை. எமக்குள்ளே என்ன இருக்கிறது என்பது எமக்குத் தெரியாது. எமக்குள்ளே இவ்வளவு திறமைகளை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கின்றானா? உமர் (ரலி) மக்கா முகர்ராமாவில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருக்கும் பொழுது அவருக்குத் தெரியாது உண்மையில் அவரிடம் மறைந்து இருந்த ஆளுமை . அவருக்குத் தெரியாது அவருக்கு உள்ளே மறைந்திருந்த சக்தி அவதாது அவரது நிர்வாகத் திறன். இப்படியாக அல்லாஹ் தஆலா நமக்குள்ளே பல வகையான திறமைகளை மறைத்து வைத்து இருக்கிறான். இந்தத் திறமைகளை நாங்கள் செலவு செய்வது எங்களுடைய கடமையாகும்

ஒரு செல்வந்தருடைய செல்வத்தை எண்ணி முடிக்கலாம். ஒரு செல்வந்தருக்கு வேண்டும் எனில் 10 பள்ளி கட்டலாம். ஆனால் ஒரு செல்வந்தருடைய செல்வாக்கு எண்ணி முடிக்க முடியாது. அந்த செல்வாக்கினால் எத்தனை பள்ளிகள் கட்டலாம் என்றும் சொல்ல முடியாது. அவருடைய செல்வாக்கு மட்டிட முடியாது. அது நேர்மையாக சரியாகப் பயன்படுத்தப்படும் என்று இருந்தால் காத்திரமான பணிகளை இன்று உலகில் சாதிக்க முடியும். அல்லாஹ் தஆலா செல்வத்தையும் தந்திருக்கிறான் செல்வாக்கையும் தந்திருக்கிறான். ஆளுமைகளைத் தந்திருக்கிறான். வளங்களைத் தந்திருக்கிறான். எழுத்தாற்றலைத் தந்திருக்கிறான், பேச்சாற்றலைத் தந்திருக்கிறான். வீரத்தைத் தந்திருக்கிறான். நிர்வாகத் திறன்களைத் தந்திருக்கிறான். 

எனவே எங்களுக்குள்ளே மறைந்திருக்கக் கூடிய ஆளுமைகளை திறமைகளை வளங்களை நாங்கள் வெளிப்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் இன்று மத்ரஸாக்களில் பட்டம் பெற்று வெளியாகக் கூடிய மாணவர்கள் அக்குரணை ரஹ்மானியாவைப் பொறுவத்த வரையில் கடந்த ஐந்து வருடங்களாக இப்படியான காத்திரமான பணியை முடித்து விட்டுப் போகின்றார்கள். ஆனால் அவர்கள் தொடர்கின்றார்களா என்பது தான் அது கேள்விக் குறியாக இருக்கிறது. இது தொடர வேண்டும். இது நிறுத்தப்படக் கூடாது. மற்றவர்களுக்கு கொடுத்த திறமையைப்பார்த்து கவலை கொள்ளக் கூடாது. ஒருவர் எழுதுவது மாற்றவருடைய எழுத்துறையின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். ஒவ்வொரு விளங்கிக் கொள்ள வேண்டும். இன்னுமொருவரைப் பின் பற்றி யாரும் எதையும் செய்ய வேண்டாம். வித்தியாசமாகச் சிந்தித்து வித்திசமான சாதனைகளை நாங்கள் நிலை நாட்ட வேண்டும். வெறுமனே மௌலவிப் பட்டத்துடன் நின்று விடாமல் பல்கலைக்கழகப் பட்டம். ஹதீஸில் கலாநிதி பட்டம், தப்ஸீரில் கலாநிதிப் பட்டம. இப்படி ஒவ்வொரு துறையிலும் பட்டடிப் படிப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய மறுமலர்ச்சி எல்லா அரபுக் கல்லூரிகளிலும் வளர வேண்டும். பட்டம் பெற்று வெளியாகி விட்டோம் இதற்குப் பிறகு முடிந்து விட்டது என்று இல்லை. தொடர வேண்டும். இதற்கு மத்ரஸாக்களும் வழியமைத்துக் கொடுக்க வேண்டும். ஓதி முடித்து விட்டு இதற்குப் பின் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி வழிகாட்டப்படுதல் வேண்டும். அதேவேளை எழுத்துறை வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் என்ன ஆளுமைகள் திறமைகள் உள்ளதோ அதனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். யாரும் மெழுகுதிர்pயாக மாறி விட வேண்டாம். விளக்குகளாக மாறி விடுங்கள். இருக்கக் கூடிய உலமாக்களில் பெரும்பான்மையானவர்கள் மெழுகுதிரிதான். புதிய விடங்கள் எதுவும் பேசுவதில்லை. கடந்த வருடம் பேசிய குத்பாவினைத் தான் இந்த வருடமும் ஓதுகின்றனர். 56 குத்பாக்களை தயாரித்து வைத்துக் கொண்டால் வாழ் நாள் முழுவதும் கடத்த முடியும். நோன்பு எந்நாளும் வரும். ஹஜ் எந்நாளும் வரும். குர்பான் எந்நாளும் வரும். சுமூகத்திற்கு என்ன தேவை என அறிந்து குத்பா மேடைகள் பயன்படுத்தப்பட வேண்டும். உலமாக்கள் விளக்குகளாக இருத்தல் வேண்டும். வெளியீடுகள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல ஆக்கங்கள் வெளிக்கொணரப்படுதல் வேண்டும்

உல்ஹிய்யாப் பற்றி நாங்கள் எழுத வேண்டும். அது முன்னரும் எழுதப்பட வேண்டும் பின்னரும் எழுதப்பட வேண்டும். கூட்டு ஸக்காத்துக்கு இல்லாத முக்கியத்துவம் ஸக்காத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுபஹ் தொழுகைக்கு இல்லாத முக்கியத்துவம் கியாமுல் லைல் தொழுகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஜும்ஆவுக்கு இல்லாத முக்கியத்துவம் இயக்கம் சார்ந்த கொள்கைளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இப்போது நாம் பேச வேண்டியது பள்ளிவாசல்களில் குர்பான் கொடுக்க இயலுமா? என்பது பற்றியாகும். பள்ளிவாசல்களில் குர்பான் கொடுப்பதற்காக இடம் கட்டியுள்ளார்கள். இது பற்றி உலமாக்கள்தான் பேச வேண்டும். எங்கள் ஊரில் 2 அரைக் கோடி ரூபாவுக்கு மாடுகள் விற்பனை இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்த மாடுகளை உண்மையான விலை 90 இலட்சம் மட்டும் தான் ஒரு கோடி 60 இலட்சம் ரூபா பணத்தை யாரிடம் கொடுத்து இருக்கிறோம். 30000 ரூபாவுடைய மாட்டை ஒரு சுன்னத்தான விடயத்திற்காக 90000 ரூபா கொடுத்து ஒரு சுன்னத்தான கருமத்தைச் செய்யப் போகிறோம். உழ்ஹிய்யா கட்டாயம் கொடுக்க வேண்டும் . அது எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாகப் பேச வேண்டும். ஹரத்தில் உழ்ஹிய்யா கொடுப்பதில்லை. அது மினாவில்தான் உழ்ஹிய்யா கொடுக்கப்படுகிறது. உலமாக்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது உண்மையை உண்மையாகச் சொல்ல வேண்டும். கசப்புக்கள் வரும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் விடுவார்கள். சற்று தாமதித்தாவது உண்மையை ஏற்றுக் கொள்வார்கள். அல்லது மரணத்திற்குப் பின் உண்மையை ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாபாவள பௌசிய்யா அரபுக் கல்லூரி தலைவர் ஏ. சீ,. எம். ஜிப்ரி ஹழரத் உடத்தலவின்னை ஹகீமிய்யா அரபுக் கல்லூரி தலைவர் ஏ. ஆர். எம். நியாஸ், தீவா சர்வதேச பிறைவைட் லிமிட்டட் உரிமையாளர் எம். வை. எம். சலாம் அக்குரணை ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் எம். ஏ. எம். சியாம் உள்ளிட்டவர்கள் கொண்டனர்
















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.