மன்னார் எருக்கலம்பிட்டியில் மாபெரும் ஹஜ் விழா

Written By avathani Media Network on Friday, September 9, 2016

(எம். எஸ். எம் சாஹிர்)

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஹஜ் பெருநாள் விழாவை வழமை போன்று இம்முறையும் மன்னார் எருக்கலம்பிட்டியில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எ.எச்.எம். அறூஸ் தெரிவித்தார்.

செப்டம்பர் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் இம்முறை இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அத்துடன் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், கார்னிவல் மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கலை கலாசார நிகழ்ச்சிகளும் விசேட பரிசளிப்பு வைபவமும் இடம் பெறவுள்ளதாலும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.