மக்கள் நலன்கருதி விரிவாக்கல் செய்யப்பட்டுள்ள அஞ்சல் சேவைகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வுட்டும் நடைபவணி.

Written By We Are Anonymous on Monday, September 5, 2016




( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் விற்பனை மேன்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விரிவாக்கப்பட்டுள்ள அஞ்சல்சேவைகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வு_ட்டும் நடைபவணி இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.

அம்பாரை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எம்.தம்பிஐயா தலைமையில் இடம் பெற்ற இவ்விழிப்பூட்டல்நடைபவணியில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும் இவ்விழிப்பூட்டல் நடைபவணியில் அம்பாரை, அக்கரைப்பற்று, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர்பிரதேசங்களிலுள்ள தபால் அதிபர்கள், உபதபால் அதிபர்கள், தபால் ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு,விரிவாக்கப்பட்டுள்ள அஞ்சல் சேவைகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தினர். 

நிந்தவூர் பிரதம தபாலகத்திலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் பிரதான வீதிவழியே சென்று, தியோட்டர் வீதி ஊடாக, 2ஆம் குறுக்குத் தெருவை ஊடறுத்து, மீராநகர் வழியே வந்து மீண்டும் பிரதான வீதியினூடாக பிரதான தபாலகத்தைஅடைந்தது.

இவ்வூர்வலத்தின் போது மக்களை விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களும் தபால் ஊழியர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நடைபவணியின் இறுதியில் நிந்தவூர் பிரதம தபாலகத்தில் தபால் அதிபர் ஏ.எம்.ஏ.றசீட் தலைமையில்கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இதில் தத்தமது பிரதேச தபாலகங்களின் குறை நிறை, தேவைகள் பற்றி தபால் அதிபர்களால் எடுத்துக் கூறப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இப்பிரதேசத்தில் சிறந்த குணமுடைய ஆற்றலுள்ள தகுதிவாய்ந்த தபால் அதிபர்கள் இருப்பதைக் கண்டு நான்மகிழ்வடைகின்றேன். உங்களின் ஒத்துழைப்போடு கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தை முதன் நிலைக்குக்கொண்டு வர விரும்புகிறேன். அதற்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். உங்கள்பிரச்சினைகள், தேவைகள் எதுவானாலும் இந்த நல்லாட்சிக் காலத்தில் முடியுமானவரை தீர்த்து வைச்கச் சித்தமாகஇருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.