உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிப்பு

Written By avathani Media Network on Saturday, September 24, 2016


அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21 ஆம் திகதி முதல் 20 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

தம் மீதான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும், தமது வழக்குகளை தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள நீதிமன்ற வரம்பிற்குள் மாற்றுமாறும் தமிழ் அரசியல் கைதிகள் 20 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலைமையின் கீழ், தமிழ் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் தலையீடு செய்வதற்கான இயலுமை இல்லையென சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

கைதிகள் சிறைக்குள் உணவுகளை தவிர்த்து வருவதாக சுட்டிக்காட்டிய சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர்களுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Source - NF
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.