சபாப் இஸ்லாமிய நிறுவனத்தினால் 20 வது தடவையாக நடத்தபட்ட கண் சிகிச்சை முகாம்

Written By avathani Media Network on Friday, September 23, 2016


(இக்பால் அலி)

எமது நாட்டின் இன நல்லிணக்கத்திற்கும் சம ஒருமைப்பாட்டுக்கும் ஆரோக்கியமான இயக்கப் பணிகளை இஸ்லாமிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புரிந்து வருகின்றன. இவர்கள் கண்களில் வெள்ளை படர்தலை சத்திர சிகிச்சை செய்து கண்களுக்கு ஒளிவூட்டி வருகின்றார்கள். இந்த பணி முற்றிலும் இலவசமாக இடம்பெறுகின்றது. இது அனைத்து இன மக்கள் மத்தியிலும் வசீகரத் தன்மை ஏற்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விசேட கண் வைத்தியர்கள் மூலம் இது நடத்தப்படுகிறது. ஆயிரக் கணக்கான சிங்கள. தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் பயன் பெற்றுள்ளார்கள். எல்லாயின மக்கள் மத்தியிலும் வித்தூண்டியிருக்கும் இத்தகைய மனித நேயப் பணிகளை நாம் பாராட்டாமல் இருக்கது முடியாது என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் சவூதி அரேபிய சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் அனுசரணையுடன் சபாப் இஸ்லாமிய நிறுவனத்தினால் 20 வது தடவையாக நடாத்தும் வெள்ளை படர்தல் சத்திர சிகிக்சை மேற்கொள்ளுவதை முன்னிட்டு நடத்த பட்ட கண் சிகிச்சை முகாம் அக்குரணை அரபா மண்டபத்தில் 20-09-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். இதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சத்திர சிகிச்சை இம்மாதம் 24 ஆம் முதல் அடுத்த மாதம் ஓக்டோபர் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

மனித நேயப் பணிகள் மூலமாகத்தான் எம்மை பற்றி நல்லெண்ணங்களையும் தப்பபிப்பிராயங்களையும் போக்க முடியும். கடந்த கலாங்களில் சில தீய சக்திகள் எமமைப் பற்றி இல்லாத பொல்லாதவையெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாதளவுக்கு கட்டுகதைகளைச் சொல்லி பெரும்பான்மையின சிங்கள சகோதர்களுக்கு மத்தியில் அவிழ்ந்து விட்டுள்ளனர். நல்லாட்சி என்பது எங்களைப் பற்றி பரப்பபட்ட அவதூறுகளை களைவதற்குகான ஆட்சியாகும். இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சவூதி அரேபியாவின் இஸ்லாமிய சர்தேச நிவாரண அமைப்பு, சாபாப் நிறுவனம், பாக்கிஸ்தான் நாட்டு வைத்தியர்கள் ஆகியோர் இணைந்து இந்த கண் சத்திர சிகிச்சையை பணி முன்னெடுத்து வருகின்றார்கள். இவர்களுடைய இந்தக் கூட்டு முயற்சி பாராட்டுக்குரியது.

எமது நாட்டிலுள்ளவர்கள் 18000க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண் சத்திர சிகிச்சை பயன்பெற்றுள்ளதாக தகவல்கள் உள்ளன. ஒரு சாதாரண ஏழை கண் சத்திர சிகிச்சை மருத்துவ முனையில் மேற்கொள்வதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். தனியார் வைத்தியசாலையில் செய்வதென்றால் ரூபா 50000 க்கு மேல் செலவு செய்ய வேண்டும். வசதியில்லாதவர்கள் பார்வைக்காக பல கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இவர்களுடைய சேவை உன்னதமிக்கதாக அமைந்துள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த சிகிச்கை பரிசோதனை செய்வதற்காக பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கண்
வைத்திய நிபுணர் அசாட் அன்சாரி, தொழில் நுட்ப உதவியார் எம். அக்ரம் 
அப்பாஸ் ஆகியவர்களுடன் கண்டி பிரதான வைத்தியசாலையின் வைத்திய 
அதிகாரி சியாம் பாரூக் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட பலர் 
கலந்து கொண்டனர்.














Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.