இந்திய மார்க்க அறிஞர் Dr கே.வீ.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்களின் விஷேட சொற்பொழிவு..

Written By avathani Media Network on Tuesday, August 2, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அழைப்பின் பேரில், இலங்கை வந்துள்ள பிரபல மார்க்க அறிஞரும், சுமார் 11 புத்தகங்களின் ஆசிரியரும், 'மானுட வசந்தம்' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வளவாளருமான Dr கே.வீ.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்களின் விரிவுரைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட சொற்பொழிவும் கேள்வி பதில் அமர்வும், எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு 'சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது. கொழும்பு 10, விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவில் பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள அதேவேளை மஃரிப் தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இச்சொற்பொழிவிலும், விஷேட கேள்வி பதில் அமர்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு: 0766 529128
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.