உயிர் காக்க உதவுங்கள்..! உதவி கோரும் சகோதரர்..!

Written By avathani Media Network on Sunday, August 28, 2016

(இக்பால் அலி)
கலகெதரை தெஹிதெனிமடிகே ஹதரலியத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயதுடைய பீ. எம். அஷ்ரப் சிறு நீராக நோய்க்கு உள்ளாகியுள்ளார். இவரது இரு சீறு நீரகங்களும் 95 விகிதமாளவு செயலிழந்து காணப்படுவதாக வைத்திய பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண கூலி வேலை செய்து சீவனோபாயம் நடத்தி வரும் ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். ஆறு பிள்ளைகளுடைய தந்தையுமாவர். இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக கணிசமாளவு நிதி தேவைப்படுகின்றது. மொத்த வைத்திய செலவுக்காக சுமார் 35 இலட்சம் அளவில் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் சகோதரர்கள் மூலம் இதுவரை 10 இலட்சம் வரை கிடைக்கப்பெற்றுள்ளன. மீகுதித் தொகையை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எனவே இந்தச் சகோதரரின் ஆரோக்கியமான நல்வாழ்வுக்காக நிதி உதவி செய்யுமாறு குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொலைபேசி இலக்கம் 0777896274. 077202033

வங்கிக் கணக்கு காதர் ஆமினா பேகம் - (மனைவியின் பெயர்) மக்கள் வங்கி

கணக்கு இலக்கம் 341200165143634 



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.