வருகிறது ஊடக மத்திய நிலையம்

Written By avathani Media Network on Thursday, August 25, 2016

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துல்லியமாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஊடக மத்திய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சின் கட்டமைப்பின் கீழும் பிரதமர் செயலகத்துடன் இணைந்தும் இந்த ஊடக மையம் செயற்படவுள்ளது. 

இது தொடர்பில் அமைச்சரவை தகவல்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பொறிமுறைகளை செயற்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையையும், துல்லியத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செயற்பாடு மிகவும் அவசியமாகும். அந்த வகையில் அரசாங்கதின் உத்தியோகபூர்வ தகவல்களையும் பாதுகாப்பு விவகாரங்களை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய ஊடக மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. முழுமையான , நம்பகரமான, சரியான உத்தியோகபூர்வ தகவல்களை மக்களுக்கு உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பது அரசின் முக்கிய பொறுப்பாக இருப்பதுடன் அதன் ஒரு நடவடிக்கையாகவே அண்மையில் தகவல் அறியும் சட்டமூலத்தையும் அமுல்படுத்தியுள்ளோம்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.