நிந்தவுர் பிரதேச உணவக உரிமையாளர்களுக்கான 'சுகாதாரம் பேணலும், ஆரோக்கிய உணவும்' விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

Written By avathani Media Network on Sunday, August 14, 2016






( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )


நிந்தவுர் பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக் கடைகள், பேக்கரிகள் போன்றவற்றில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாகபொது மக்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும், பிரதேச சபையும் துரிதநடவடிக்கைகளில் குதித்துள்ளனர்.



நிந்தவுர் பிரதேச சபையும், நிந்தவுர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து நிந்தவுர் பிரதேசஉணவக உரிமையாளர்களுக்கு 'சுகாதாரம் பேணலும், ஆரோக்கிய உணவும்' எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக்கருத்தரங்கொன்றை இன்று நடாத்தியது.



இக்கருத்தரங்கில் நிந்தவுர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.தஸ்லீமா பசீர், நிந்தவுர் பிரதேச சபையின்உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஜௌபர், பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர், வருமானபரிசோதகர் எம்.சலீம், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ.எம்.சித்தீக், பொதுச் சுகாதாரப்பரிசோதகர்களான எம்.ஏ.அப்துல் ஹமீட், எம்.ஐ.எம்.மன்சூர், நிந்தவுர் பிரதசத்திலுள்ள தேநீர்க் கடை,சாப்பாட்டுக்கடை உரிமையாளர்கள், பிரதான உணவு தயாரிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



பொது மக்களைப் பாதுகாக்கக் கூடிய வகையில் எவ்வாறு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும்?உணவு தயாரிப்பின் போது தயாரிப்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்?, சுகாதாரமான உணவுகள்தயாரிக்கும் போது எவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்?, உணவுகளில் நோய்க் கிருமிகள் தொற்றாது எவ்வாறுபாதுகாப்பது? இவற்றில் உரிமையாளர்களின் வகிபாகம்? இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் எவ்வாறு தண்டிக்கப்படுவர்?இவைகளிலிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறலாம் போன்ற பல்வேறு விடயங்கள் விலாவாரியாக எடுத்துக்கூறப்பட்டன.



'இக்கருத்தரங்கின் பயன்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிந்தவுர்ப் பிரதேசத்தில் வாழும் சுமார் 50 ஆயிரம் மக்களின்சுகாதாரத்தைப் பாதுகாக்க முடியும்' என பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் தெரிவித்தார்.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.