கொழும்பு புறக்கோட்டைப் பகுதிக்கு நாளாந்தம் புதிய புதிய பொருட்கள் விற்பனைக்கு வருகிறன்றன. அவைகள் வித்தியாசமான பொருட்களாக இருப்பின் உடனடியாக விற்பனையாகியும் விடுகின்றன.
அந்த வகையில் அண்மையில் புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவுக்கு மிக அரிதான பொருட்கள் பல விற்பனைக்கு வந்திருந்தன.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட காலங்களில் பாவிக்கப்பட்ட அரிதான பொருட்களும் அவைகளில் அடங்கியிருந்தன. அவற்றின் தரம் உறுதி பற்றி தெரிந்து கொண்டவர்கள் மிகவும் ஆர்வத்துடன் அவற்றைக் கொள்வனவு செய்வதையும் நினைவுக்காக இன்னும் சிலர் அவற்றை வாங்கிச்செல்வத்தையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
(படமும், தகவலும் : பைஸர் அமான்)











