( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'நெல்வயல்களில் உற்பத்தியாகும் வைக்கோல்களை நெருப்பிட்டு எரிப்பதைத் தடுத்து, அவற்றை மீண்டும்வயல்களுக்கு இயற்கைப் பசளையாக வழங்குவோம் ' எனும் தொணிப் பொருளிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கும்,விழிப்புணர்வுப்பேரணியொன்றும் இன்று நிந்தவுரில் இடம் பெற்றது.
நல்லாட்சி நாயகன் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மக்கள் நல்வாழ்வுக்கான ஐந்தம்சத்திட்டங்களில் முதன்மையான தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தினை வெற்றி கொள்ளச் செய்யும் நோக்கில் நிந்தவுர்பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கொன்று இன்று நிந்தவுர் பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதி விழியே அல்லி மூலைச் சந்தி வரை சென்று, கமநல மத்திய சேவை நிலையத்தில்முடிவுற்றது.
இவைகளில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஸ்சேஷ்.எம்.ஐ.அமீர், அம்பாரை மாவட்ட பிரதிவிவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், மாவட்ட சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்ஐ.எல்.ஏ.ஹார்லிக், விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி.குமுதினி கல்யாணி, பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி திருமதி.தஸ்லிமா பஸீர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் உள்ளிட்டஉயரதிகாரிகளோடு, விவசாயிகள், மாணவர்கள், பிரதச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகாரியாலய உத்தியோகத்தர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
'எரிக்காதே எரிக்காதே வைக்கோலை எரிக்காதே, நெல் வீட்டுக்கு வைக்கோல் வயலுக்கு, வைக்கோல் ஒரு பசளைக்களஞ்சியம், எரித்தால் நாசம் விதைத்தால் பணம் ' போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்களைச் சுமந்து,கோசங்களை எழுப்பியவாறு பேரணியினர் ஊர்வலமாகச் சென்றனர்.
அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஸ்சேஷ்.எம்.ஐ.அமீர், அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் ஆகியோர் விழிப்புணர்வு உரைகளையும் நிகழ்த்தினர்.
