சாலை விபத்துக்களை தடுப்பதற்காக வேண்டி காத்தான்குடி பொலிஸாரினால் முன்னெடுத்த விழிப்பூட்டல் நிகழ்வு! (படங்கள் இணைப்பு)

Written By avathani Media Network on Wednesday, August 10, 2016


(S.சஜீத்)

சாரதிகள்  மற்றும் பாதசாரிகளின் கவனயீன
ம் காரணமாக 
 நாளந்தம் எமது பிரதேசத்தில் அதிகரித்து காணப்படும் சாலை விபத்துக்களை கருத்திற் கொண்டு காத்தான்குடி பொலிஸாரினால் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் (09.08.2016) நேற்றைய தினம் பொதுமக்களுக்கு சாலை விபத்துக்கள் தொடர்பாக விழிப்பூட்டல் நிகழ்வுவோன்று இடம்பெற்றன.

இதன் போது கடந்த நாட்களில் இலங்கையில் இடம்பெற்று பதிவான பாரிய சாலை விபத்துக்களும் அவ்விபத்துக்கள் ஏற்பட்டமைகான சாரதி மற்றும் பாதசாரிகளின் தவறுகளையும் உணர்த்தும் வகையில் வென்திரையிட்டு விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக பல படிப்பினைகளைப் பொதுமக்கள் பெறக்கூடிய பல காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

காத்தான்குடி பொலிஸார் சாலை விபத்துக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி பொதுமக்கள் மத்தியில் இப்படியான விழிப்பூடல் நிகழ்வுகள் பலதினை முன்னெடுத்து  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.