இன நல்லுறவை வலுப்படுத்தும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" காத்தான்குடி மண்ணில்

Written By avathani Media Network on Saturday, August 27, 2016


இன நல்லுறவை வலுப்படுத்தும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" காத்தான்குடி மண்ணில் முதன் முதலாக "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" எனும் இன நல்லுறவுக்கான நிகழ்ச்சி. இஸ்லாம் அல்லாத மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கான இஸ்லாம் பற்றிய தங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களைப் பகிரங்கமாகவும் துணிவுடனும் நேருக்கு நேராக கேட்டுத் தெளிவு பெறுவதற்கான ஓர் இனிய சந்தர்ப்பம். இன்ஷா அல்லாஹ் நாளைக் காலை (28/08/2016) 09:00- நண்பகல் 12:00 மணி வரை காத்தன்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில் மாற்றுமத அன்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைச் செயலாளர் சகோ. F.M. ரஸ்மின் (MIS.c) இந்நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருக்கும் மாற்று மத அன்பர்களுக்கு அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், சிந்திக்கத் தூண்டும் இஸ்லாமிய நூல்கள் என்பன அன்பளிப்பாக வழங்கப்படுவதோடு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு இஸ்லாமிய அன்பர்கள் குடும்ப சகிதம் தவறாது கலந்து கொள்வதுடன், தங்களுக்குத் தெரிந்த மாற்றுமத் சகோதரர்களையும் கலந்து கொள்ளச் செய்யுமாறு மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் தமாஅத் காத்தான்குடிக் கிளை நிர்வாகம், மற்றும் உறுப்பினர்கள். 077 1100710
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.