வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்தின் மரம் நடும் நிகழ்வு-படங்கள்.

Written By avathani Media Network on Monday, August 1, 2016

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், அமைச்சருமான றஊப் ஹகீமின் விழிகாட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்தின் ஆரம்ப வைபவம் 01-08-2016 இன்று திங்கட்கிழமை புதிய காத்தான்குடி மஃறூப் வீதியில் இடம்பெற்றது.

'ஆலமரம் ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம் வாழ வேண்டும் அதை வாழ்விற்க புறப்படுவோம்' எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்திற்கான முதலாவது பலன்தரக்கூடிய மரத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷப்லி பாறூக் நட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி பிரதேச கட்சி முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழு பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அணி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த வேலைத் திட்டம் பலன்தரக்கூடிய மர வகைகளை இளைஞர் காங்கிரஸ் அணியினரைக் கொண்டு ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள வீடுகளில் நட்டி பராமரிப்பதற்கான ஏற்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளதோடு இம் முயற்சியினுடாக இளைஞர்களுக்கும் இப் பிரதேச மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதுடன் மேலும் பயனுடைய இலக்;குகளை அடைவதற்கு இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.