காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி - அல்ஹம்து லில்லாஹ்

Written By avathani Media Network on Tuesday, August 30, 2016


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – காத்தான்குடி கிளை நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 28.08.2016 
அன்று 
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

☛முஸ்லிம்கள் உருவம் இல்லாத ஒன்றை வணங்கும் போது நம்பிக்கை எப்படி உருவாக முடியும்?

☛முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது ஏன்?

☛முஸ்லிம்கள் சுன்னத் செய்து கொள்வது ஏன்?

☛நம்பிக்கை சார்ந்த இறைவனான அல்லாஹ்வை வணங்குவதற்கு ஏன் இத்தனை பள்ளிகள்?

☛சூனியம் செய்வதற்கு பலரும் கோயிலுக்கு வரும் போது முஸ்லிம்கள் மாத்திரம் ஏன் வருவதில்லை?

☛இஸ்லாத்தை நான் எப்படி பின்பற்றுவது?

☛அல்லாஹ்வை வணங்குவதாக சொல்லும் முஸ்லிம்கள் மக்காவில் உள்ள கருப்புக் கட்டிடத்தை வணங்குவது ஏன்? அதற்குள் என்ன இருக்கிறது?

போன்ற ஏராளமான கேள்விகள் வந்திருந்த சகோதரர்களினால் முன்வைக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது.

காத்தான்குடி வரலாற்றில் முதன் முதலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சகோதரர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் பதிலளித்தார்.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.