நிந்தவுர் மதீனா மகா வித்தியாலய புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழா.

Written By avathani Media Network on Thursday, August 4, 2016



( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவுர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் புதிதாய் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழாநேற்று இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எம்.எச்.ஏ.அப்துல் பதியு தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விஅமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம்,அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் போல் உள்ளிட்ட உயரதிகாரிகள், கல்விமான்கள், பாடசாலை அபிவிருத்திச்சபையினர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இப்போதுள்ள மாணவர்கள்தகவல் புரட்சியினால் தொழிஙட்ப அறிவைப் பெற்றுள்ளீர்கள். இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. இதனைப்பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கற்பது உள்நாட்டுச் சந்தையில் வேலை தேடுவதற்காக மாத்திரமல்ல.வெளிநாடுகளிலும் வேலை செய்ய வேண்டுமானால் இந்தத் தொழிஙட்ப அறிவு மிகவும் இன்றியமையாததாகும்.எனவே கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் தான் இன்று உங்கள் முன் உயர்ந்து நிற்பவர்கள். எனவே அன்பான மாணவர்களே நீங்களும்வாழ்வில் உயர கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனக் கேட்டுக் கொண்டார்.

மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி அவர்களின் கடந்த கால கல்விப் பணியைப் பாராட்டி,வித்தியாலய அதிபரினால் பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டது.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.