(ஜுனைட்.எம்.பஹ்த்)
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் ஊடகம், ஊடகவியலாளருக்கான நெறி சார் அறிக்கையிடல் தொடர்பான இருநாள் கருத்தரங்கில் முதல்நாளாக இன்று ஓகஸ்ட் 20ம் திகதி கல்லடி, கிறீன் கார்டன் ஹோட்டலில் காலை 09.00 மணி தொடர்க்கம் இடம் பெற்றது .
இன்றய முதல் நாள் அமர்வில் இலங்கை அடிப்படை சட்டம், மனித உரிமை சட்டங்கள், ஊடகச்சட்டங்கள் , கட்டாயம் ஊடகவியலாளர்கள் தெறிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் தொடர்பில் M.H.M.ஹஸன் றுஸ்திLLB(Hons) & MA in Criminology & police Admin Attorney- at- Law. அவர்களும் மீடியா ஊடகம், Privacy என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம், அது தொடர்பிலான சட்டங்கள் போன்றவை தொடர்பில் திருமதி.மிருதினி சிரிஸ்குமார் (LLB) (Col) Attorney -at law, Notary public, commissioner for oaths & Company Secretary Legal Aid Commission ,Batticaloa அவர்களும் விரிவுரை வழங்கினார்கள்..
இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியளாலர்கள் மற்றும் ஊடக கற்கை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக் கருத்தரங்கினை ACTED ,SOND மற்றும் இலங்கை சட்டதரனிகள் சங்கம் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தது..
இதனது இரண்டாம் நாள் கருத்தரங்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை கல்லடி, கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.



