BCAS Campus மட்டகளப்பு வளாகம் நாடாத்தும் உயர்கல்வி இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

Written By avathani Media Network on Monday, August 8, 2016






க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோருக்கான ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு.

இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சையினை சந்திக்கும் உங்கள் பிள்ளைச் செல்வங்களின் எதிர்கால உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான விரிவான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று துறைசார்ந்த வளவாளர்களைக் கொண்டு பின்வரும் ஒழுங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



காலம் : 13.08.2016 (சனிக்கிழமை)

நேரம் : மாலை 07.00 தொடக்கம் 10.00 மணி வரை

இடம் : பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபம்.  

(Federation Hall) - காத்தான்குடி. 

(குறிப்பு: இந்நிகழ்விற்கான அழைப்பிதழ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது)

அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பெற்றோர்களே!

நமது பிள்ளைகளின் உயர் கல்வி என்பதும் எதிர்கால தொழில் துறை என்பதும் நம் ஒவ்வொருவரினதும் பாரிய எதிர்பார்ப்பும் கனவுமாகும். ஆனால் நம்மில் பலருக்கு இந்த கனவை அடைந்து கொள்ளக் கூடிய வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் உரிய நேரத்தில் போதியளவு கிடைப்பதில்லை என்பது ஒரு துரதிஷ்டமான விடயமாகும்.

இந்த தடுமாற்றத்திற்கான தீர்வினை துறை சார்ந்த கல்வியாளர்களை அணுகி பெற்றுக் கொள்ள கூடிய வழி வகைகள் இருந்தபேதிலும் பல நேரங்களில் மாணவர்களோ பெற்றோர்களோ தாமாக முன்வந்;து இதற்கான தெளிவுகளைப் பெற்றுக் கொள்வது மிக மிக குறைவாக காணப்படுகின்றது. 

சமுகத்தின் இப்பாரிய தேவையை கருத்திற் கொண்டு இலங்கை மற்றும் சர்வதேசத்தில் உயர்கல்வித் துறையில் கடந்த 18 வருடங்களாக மாணவர்களினதும் பெற்றோர்களினதும் நம்பிக்கையினை வென்ற டீஊயுளு ஊயுஆPருளு உயர் கல்வி நிறுவனம் மேற்படி கருத்தரங்கினை ஒழுங்கு செய்துள்ளது. 

இக்கருத்தரங்கில் இலங்கையில் அரசாங்க உயர்கல்வித் துறையில் பிரபல்யம் பெற்ற துறைசார்ந்த பேராசிரியர்களையும் கல்வியாளர்களையும் அழைத்துவந்து நமது பெற்றோர்களுக்கான பெறுமதிமிக்க ஆலோசனைகளை வழங்கவுள்ளது. 

அந்த வகையில் முன்னாள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவரும், முன்னாள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான பேராசிரியர் ஷாணிகா ஹிரும்புரிகம அவர்களும், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி ளு. குணபாலன் அவர்களும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (UGC). மஹ்றூப் அவர்களும் கலந்து கொண்டு பெறுமதிமிக்க ஆலோசனைகளைப் பெற்றோருக்கு வழங்கவுள்ளனர்.

தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் உங்கள் பிள்ளையின் அடுத்த கட்ட நகர்வு சம்பந்தமாக உரிய நேரத்தில் உரிய தரப்பினரால் கிடைக்கப் பெறும் இப் பெறுமதியான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் இந்த அருமையான சந்தர்ப்பத்தினை தாங்கள் தவறவிடாது நிகழ்வுக்கு உரிய நேரத்திற்கு சமுகம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இக்கருத்தரங்கில் பின்வரும் முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக விளக்கப்படவிருக்கின்றன.

 அரசாங்கமும் ஏனைய அரசசார்பு உயர் கல்வி நிறுவனங்களும் வழங்கும் உயர்கல்வி வாய்ப்புக்கள் எவை?

 பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்கள் அதன் உச்ச பயனை அடையும் பொருட்டு எவ்வாறு தம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும்.? பல்கலைக் கழக பட்டப்படிப்பக் காலத்தில் மாணவர்கள் தம்மை முழுமையாக வளர்த்துக் கொள்வது எவ்வாறு..?

 தனியார்துறை உயர்கல்வி வாய்ப்புக்கள் எவை?

 இலங்கையில் தனியார் உயர் கல்வியைத் தெரிவு செய்யும் போது கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் எவை..? அதன் தரத்தை அளவிடும் பொறிமுறை எப்படி?

 சர்வதேச உயர் கல்வியின் போக்கும் அதன் புதிய வாய்ப்புகளும் எவை..? அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது..?

 உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில் சந்தை எவ்வாறு உள்ளது?

 பல்கலைக்கழகமொன்றில் உயர்கல்வியினைத் தொடரும்போது ஏனைய தொழில்சார் (Professional Qualifications) கல்வித் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் யாவை?

 உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தில் உயர் வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் வாய்ப்புக்களும் அதற்காக வேண்டப்படும் திறன்களும் யாவை?

போன்ற பல்வேறு விடயங்கள் இக்கருத்தரங்கில் தெளிவு படுத்தப்படவிருப்பதோடு பெற்றோர்களின் கேள்விகளுக்கான பதில்களும் வளவாளர்களால் வழங்கப்படவிருக்கின்றன. 

எனவே. நமது பிரதேசத்தில் முதன்முறையாக நடாத்தப்படுகின்ற இப்பெறுமதிமிக்க கருத்தரங்கில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 


குறிப்பு: இலவசமாக நடாத்தப்படும் இக்கருத்தரங்கினைத் தொடர்ந்து இராப்போசனம் (Dinner) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாலும் குறிப்பிட்ட ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளதாலும் வருகை தரும் பெற்றோர்கள் முன்கூட்டியே உங்களின் பெயர்களைப் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்

தொடர்புகளுக்கு - 077-7666432, 077-7692314, 077-4163460.

ஏற்பாட்டுக் குழு.

BCAS மட்டக்களப்பு வளாகம். 065-2228451.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.