அஷ்ஷஹீத் ஷரீப் அலி அவர்களின் 26வது ஆண்டு நினைவு பேருரையும் கையேடு வெளியீடும் - சிரெப்

Written By avathani Media Network on Tuesday, August 23, 2016


பாசிசப்புலிகளினால் கொல்லப்பட்ட்ட அஷ்ஷஹீத் சரீப் அலி அவர்களின் 26வது ஆண்டு நிறைவு ஞாபகார்த்த உரையும், கையேடு வெளியீடும் ஓட்டமாவடி அமெரிக்கன் கல்லூரி கேட்போர் கூடத்தில் கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளர் நிசார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

வரலாற்று மனிதர் அஷ்ஷஹீத் சரீப் அலி என்ற தலைப்பில் நினைவுரையை மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் பிரதித்தலைவரும், ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளருமான ஜுனைட் நளீமி நிகழ்த்தினார். 

மர்{ஹம் அஷ்ஷஹீத் சரீப் அலி அவர்களின் வாழ்க்கையை கல்வி நோக்கு, கலாசார, விளையாட்டு, அரசியல், சகவாழ்வு, குடும்பவியல் நோக்குகள் என பிரித்து தேசிய சர்வதேசிய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டது. 

பிரதேச புத்தி ஜீவிகளும், கல்வி மான்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். வரலாற்று மனிதர் அஷÊஷஹீத் சரீப் அலி என்ற வாழ்க்கை குறிப்பு கையேடும் வெளியிட்டு வைக்கப்பட்டது.





































Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.