காத்தான்குடி பிஸ்மி கின்டர்காடன் மாணவர்களின் வருடாந்த கல்விச்சுற்றுலா 2016 - படங்கள்

Written By avathani Media Network on Wednesday, August 17, 2016


காத்தான்குடி பிஸ்மி கின்டர்காடன் மாணவர்களின் வருடாந்த கல்விச்சுற்றுலா கடந்த 11.08.2016 வியாழக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 07.00 மணி வரை இடம்பெற்றது. இந்த கல்விச்சுற்றுலா காத்தான்குடியிலிருந்து ஆரம்பமாகி அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தது.

இச்சுற்றுலாவில் காத்தான்குடி மற்றும் பாலமுனை பிஸ்மி கின்டர்காடன் கிளைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது தாய்மார்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதோடு பிஸ்மி கின்டர்காடன் பாடசாலையின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் உட்பட ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். 

அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இக்கல்விச்சுற்றுலாவில் மாணவ மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகம், அதன் வாசிகசாலை மற்றும் முஸ்லிம் பாரம்பரிய நூதனசாலை என்பவற்றையும் பார்வையிட்டனர். அத்தோடு ஒலுவில் துறைமுகம், சம்மாந்துறை நீர் சுத்திகரிப்பு நிலையம், இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை, ஹிங்குரானை சீனித் தொழிற்சாலை ஆகிய முக்கிய இடங்களை பார்வையிட்டதுடன் பல்வேறு விடயங்களையும் அறிந்து கொண்டனர். அத்தோடு மாணவர்கள் கல்முனை கடற்கரையில் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டதோடு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.