NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி.

Written By avathani Media Network on Wednesday, July 6, 2016


(NFGG ஊடகப் பிரிவு)

மலர்ந்திருக்கின்ற ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். சிறப்பு மிக்க இத்தினத்தில் நம் அனைவரின் மீதும் எல்லாம் வல்ல இறைவனின்சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு இவ்வீகைத் திருநாளை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நமதுநாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான வேண்டத்தகாத சில இனவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றமை மிக வேதனைக்குரியவிடயமாகும். எனினும் இலங்கைவாழ் முஸ்லிம்களாகிய நாம் கடந்த காலங்களில் இவ்வாறு திட்டமிட்டு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டஇனவாத நடவடிக்கைகளை எமது பொறுமையான, நிதானமான முன்னெடுப்புகளினூடாகவும் தொடர்ச்சியான பிரார்த்தனைகளின் ஊடாகவுமேவென்றெடுத்தோம். எனவே இவ்வேளையில் நாம் அனைவரும் எமது நாட்டில் இனங்களுக்கடையில் நிலையான சகவாழ்வும் மத நல்லிணக்கமும்பரஸ்பர நம்பிக்கையும் மேலும் வலுப்பெறுவதறகு தொடர்ந்தும் பிராத்திக்கவேண்டும்.

பலத்த எதிர்பார்ப்புக்களுடனும் பலவேறு அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் நாம் கொண்டு வந்த இந்நல்லாட்சி மாற்றம் இப்பொழுது மக்களின்அபிலாஷகளை போதுமானளவு நிவர்த்தி செய்யும் வகையில் அமையப்பெறவில்லை எனும் ஆதங்கம் எம் அனைவர்களுக்குள்ளும் தற்பொழுதுதோன்றியிருக்கின்றது. எனவே இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்கும் உண்மையான நல்லாட்சி ஒன்று உருவாவதற்கும் நாம் இத்தினத்தில் பிரார்த்திக்ககடமைப்பட்டுள்ளதுடன் அதற்காக ஒன்றுபட்டு பாடுபடுவதற்கான உறுதிப்பாட்டினையும் இந்நன்னாளில் நாம் மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் இன்று உலகலாவிய ரீதியில் எமது முஸ்லிம் சமூகம் உட்பட ஏனைய மக்களும் பல இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும்முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் மீட்சிக்காகவும் நல்வாழ்விற்காகவும் நாம் இன்றைய நாளில் பிரார்த்திக்கவேண்டும். 

மீண்டும்மொரு முறை, அனைவருக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். 

' ஈத் முபாரக்'
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.