எச்சரிக்கை...!!!..உங்கள் குடிநீர் போத்தல் தரமானதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்....!!!!!!!

Written By avathani Media Network on Saturday, July 9, 2016


(முஹம்மது ஸில்மி -கிழக்கு பல்கலைக்கழகம்)

நாம் பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் ஒரே வகையிலான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுவதில்லை. அதன் தரத்தில் நிறைய மாற்றங்கள் உள்ளன.

இந்த மாற்றங்கள் தான் நமது உடல் நலத்திற்கு பெரும் அபாயமாக அமைகின்றன. ஆம், ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் நாற்காலி, டிவி போன்றவை தயாரிக்க தான் பயன்படுத்த வேண்டும். ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் தான் தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். எந்தெந்த பிளாஸ்டிக் உகந்தது, தீயது என்பதை அதில் இருக்கும் குறியீட்டு எழுத்துக்களை வைத்து கண்டறியலாம். அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.

பெரும்பாலான பொருட்கள் PET / PETE என்ற வகை பிளாஸ்டிக்கில் தான் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீர் பாட்டில், கூல் ட்ரிங்க்ஸ் சில பேக்கேஜ் போன்றவைகளில் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒருமுறை மட்டும் பயன்படுத்த வேண்டிய பிளாஸ்டிக் பொருளாகும். மீண்டும், மீண்டும் இதை பயன்படுத்துவதால் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகும் அபாயம் இருக்கிறது. இது மிகையான நச்சுத்தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.டி.பி (HDP / HDPE) வகை கடினமான பிளாஸ்டிக் பால் ஜக் (Jug), டிட்டர்ஜன்ட், எண்ணெய் பாட்டில்கள், பொம்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பேக் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பிளாஸ்டிக்கில் எந்த இரசாயன வெளிபாடுகளும் இருப்பதில்லை. இந்த வகை பாட்டில்களில் நீர் பிடித்து குடிப்பது தவறில்லை, இவை பாதுகாப்பானவை. எனவே, இந்த சீல் உள்ள பாட்டில்களை தண்ணீர் குடிக்க பார்த்து வாங்குங்கள்.
PVS / 3V இந்த வகைகள் மிருதுவான, வளைந்துக் கொடுக்கும் பிளாஸ்டிக். உணவுப் பொட்டலங்களை கட்டுவதற்கு, சிலவகை குழந்தைகள் பொம்மை, போன்றவை தயாரிக்க இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து இரண்டு வகையான நச்சுத்தன்மை உள்ளது. இந்த நச்சுக்கள் உடலின் ஹார்மோன்களை பாதிக்கவல்லது. எனவே, இதை தவிர்ப்பது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் அறிவுரைக்கின்றனர்.

தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க LDPE என்ற பிளாஸ்டிக் வகையை பயன்படுத்தவே கூடாது. இது எந்த கெமிக்கலும் வெளிப்படுத்துவதில்லை எனிலும் கூட, இந்த பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகள், பானங்கள் அடைத்து பருகுவது உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க பெரும் காரணமாக இருக்கிறது.

பாலீஸ்டிரின் (PS) மிகவும் விலை அதிகமான, எடை குறைவான பிளாஸ்டிக். பானம் குடிக்கும் கப், உணவுகள் அடைப்பதற்கு, முட்டை அடுக்கி வைக்க என பல்வேறு பயன்பாட்டிற்கு இது உபயோகப்படுகிறது. இதை நீண்ட காலம் மீண்டும், மீண்டும் பயன்படுத்த கூடாது.

ஸ்போர்ட்ஸ் தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள் அடைப்பதற்கு PC / பெயரிடப்படாத பிளாஸ்டிக் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒருவகையான மிகவும் அபாயாமான பிளாஸ்டிக் ஆகும். இது மறுசுழற்சிக்கு உகந்தது அல்ல. இது, உணவு பொருட்கள் அடைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் (BPA) கலப்பு கொண்டுள்ளது ஆகும்.
நன்றி-இணையம்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.