ஓட்டமாவடி மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா

Written By avathani Media Network on Monday, July 18, 2016


(இக்பால் அலி)

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டமாவடி மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா எதிர்வரும் 22-07-2016 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல் கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகஸ்தர் அஷ;nஷய்க் ஏ. எல். பீர்முஹம்மது தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக அஷ;nஷய்க் முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். 

இதில் குத்பா பேருரையை அஷ;nஷய்க் கலாநிதி அம்ஜத்த ராஸிக் உளத்தூய்மை என்ற தலைப்பிலும் , அஷ;nஷய்க் முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி மஸ்ஜித் ஒழுக்க மாண்புகளைக் கட்டியெழுப்பும் கேந்திர நிலையம் என்ற தலைப்பிலும் அஷ;nஷய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல் (ஸலபி) அஹ்லுஸ் ஸுன்னாவின் பார்வையில் நபித்தோழர்கள் என்ற தலைப்பிலும் அஷ;nஷய்க் கலாநிதி எம். எல். முபாரக் மதனி நிம்மதியான வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்கள் என்ற தலைப்பிலும் நன்றியுரையை அஷ;nஷய்க் ஹபீப் ரியாதி உரையாற்றவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.