(இக்பால் அலி)
நாளை முஸ்லிம்கள் கொண்டாடவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு அக்குரணை நகரிலுள்ள ஜவுலிக் கடைகளில் வியாபாரம் களை நிற்கிறது.
ஆண்கள் பெண்கள் சிறார்கள் முதியவர்கள் பல தரப்பினர்களும் ஜவுலிக் கடைகளில் நிறைந்து காணப்படுகின்றனர். இவர்கள் நாளை நடைபெறவுள்ள நோன்புப் பெருநாளை மனமகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றார்கள்.
