படைத்தவனின் ஆணைக்கு அடிபணிந்து, பல்வேறுபட்ட தியாகங்களுடன் பகல் முழுவதும் நோன்பிருந்து, இராக்கால வணக்கங்களையும் இடைவிடாது நிறைவேற்றி, முழுமையான ஆத்மீக திருப்தியோடு பெருநாள் தினத்தை நமது நாட்டிலும் கடல் கடந்தும்கொண்டாடும் ஈமானிய உறவுகள் அனைவருக்கும் ஈகைத்திருநாளாகிய இந்நந்நாளில் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மட்டில்லாத மகிழ்ச்சியை அடைகிறேன்" என்று சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்
இளம் விதவைகள், அனாதைச்சிறார்கள், விசேட தேவையுடையோர் என வெந்து வடியும் கண்ணீரைச்சுமந்த அந்த நலிவுற்ற மக்களுக்காக தொடராக உழைத்து வருகின்ற ஒரு வலிந்துதவும் இயக்கம் என்ற அடிப்படையில் அம்மக்களுக்கும் உளம் பூரித்து வரும் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,
அதே போன்று இவ்வாறான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க எமது சமூக மதிப்பீட்டுக்கான அமைப்புக்கு மன நிறைவோடு நிதிப்பங்களிப்புகளை அள்ளித்தருகின்ற மதிப்புக்குரிய தனவந்தர்களுக்கும் நல்லுள்ளங்களுக்கும் ஈகைத்திருநாளின் வாழ்த்துச்செய்தியினை பகிர்ந்து கொள்வதோடு அவர்களின் பொருளாதாரம் மென்மேலும் வளர்ந்தோங்கவும் வல்லோனை வேண்டுகின்றேன்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் எண்ணங்களையும் செயல்களையும் முழுமையாகப்பொருந்திக்கொள்வதோடு ஏழை, எளியோர்களின் துயர் துடைக்கின்ற இவ்வறப்பணியில் எமது இறுதிமூச்சு வரைக்கும் இறையச்சத்துடன் நிலைத்திருப்பதற்கு அந்த வல்ல நாயன் அருள் புரியவேண்டும் என இப்புனித நாளில் பூரணமான நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்.என இல்மி அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்

