புனித நோன்பு பெருநாளையொட்டி காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகம் ஏற்பாடு செய்த முற்றத்துப் பெருநாள் கலை கலாசார இலக்கிய விழா காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கழகத்தின் தலைவர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் கடந்த சனி (09.07.2016) மாலை இடம் பெற்றது.
நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்பு செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் பிரதம அதிதியாகவும் தொழிலதிபர் தேசமான்ய ஏ.எல்.மீராசாஹிபு கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.புத்திஜீவிகள் இலக்கிய வாதிகள் கல்விமான்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் அருளைச் சொரிந்த அற்புத மாதம் என்ற தலைப்பில் கவியரங்கு இடம் பெற்றது.கவிஞர்களான பதியதளாவ பாறூக் மதியன்பன்மஜீத் காத்தான்குடிபௌஸ் முகைதீன்சாலி எம்.ரி.எம்.யூனூஸ் ஏரீஎம்.றியாஸ் அபூமின்ஹாஜ் கலைமதி றபாய்தீன் ஆகியோர் கவிமழை பொழிந்தனர்.
மகிழ்வான வாழ்க்கைத் தந்தது அந்தக்காலமா இந்தக்காலமா என்ற தலைப்பில் கலாபூசனம் எம்.மஹ்ரூப் கரீம் தலைமையில் பட்டிமன்றம் இடம் பெற்றது அந்தக்காலம் என்ற அணியில் ரீ.எல்.ஜவ்பர்கான் காத்தான்குடி பாத்திமா முகைதீன்சாலி ஆகியோரும் இந்தக்கால அணியில் எம்.எஸ்.எம்.நூர்தீன் அபூமின்ஹாஜ் திரமதி ஜாஹிதா ஆகியோரும் விவாதித்தனர். இடம்பெற்றதுடன் கவிஞர்கள் ஊடகவியலாளர்கள் பட்டமளித்து விருதுகள் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
