கெக்கிராவையில் இயங்கும் ரா.ப. சர்வதேச கல்வி வளாகத்தின் (Raapa International Campus) “தாய்த் தமிழ் அரங்கு” வருடாந்த தேசிய நிகழ்வானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26,27,28 ஆகிய தினங்களில் மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.
“மானுடச் செழுமைக்காய் தமிழ் மொழி ஆற்றும் பங்களிப்பிலேயே அதன் வளர்ச்சியும் அடர்த்தியும் தங்கியிருக்கிறது” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவிருக்கும் இவ்வருடத்திற்கான தாய்த் தமிழ் அரங்கில் மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் துறைப்பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் பா.சங்கரேஸ்வரி உட்பட இன்னும் பல இந்திய மற்றும் இலங்கைப் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ் அரிய நிகழ்வினை முன்னிட்டு பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கான போட்டி நிகழ்வுகளை நடாத்த ரா.ப.கல்வி வளாகம் தீர்மானித்துள்ளது.
போட்டி விபரங்கள்
பிரிவு I ( க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கானது)
கட்டுரைப் போட்டி
தலைப்பு : சாபக்கேடாகியுள்ள சமூக ஊடகங்கள்
அளவு : A4 size 04 பக்கங்கள்
பரிசு : முதலாம் பரிசு 7500/= பணப்பரிசும் சான்றிதழும்
இரண்டாம் பரிசு 5000/= பணப்பரிசும் சான்றிதழும்
மூன்றாம் பரிசு 3500/= பணப்பரிசும் சான்றிதழும்
பிரிவு II (பல்கலைக்கழக மாணவர்களுக்கானது)
கட்டுரைப் போட்டி
தலைப்பு : தாய்மொழியில் கல்வி கற்பதன் அவசியம்
அளவு : A4 size 06 பக்கங்கள்
பரிசு : முதலாம் பரிசு 10000/= பணப்பரிசும் சான்றிதழும்
இரண்டாம் பரிசு 7500/= பணப்பரிசும் சான்றிதழும்
மூன்றாம் பரிசு 5000/= பணப்பரிசும் சான்றிதழும்
கவிதைப் போட்டி (புதுக்கவிதை)
தலைப்பு : நல்ல மானுடம் மலரச் செய்வோம்
அளவு : A4 size 06 பக்கங்கள்
பரிசு : முதலாம் பரிசு 10000/= பணப்பரிசும் சான்றிதழும்
இரண்டாம் பரிசு 7500/= பணப்பரிசும் சான்றிதழும்
மூன்றாம் பரிசு 5000/= பணப்பரிசும் சான்றிதழும்
பிரிவு III (திறந்த போட்டி - சகல வயதினருக்குமானது)
கட்டுரைப் போட்டி
தலைப்பு : மானுடச் செழுமைக்கு தமிழால் நாம் ஆற்றவல்ல பங்களிப்பு
அளவு : A4 size 10 பக்கங்கள்
பரிசு : முதலாம் பரிசு 10000/= பணப்பரிசும் சான்றிதழும்
இரண்டாம் பரிசு 7500/= பணப்பரிசும் சான்றிதழும்
மூன்றாம் பரிசு 5000/= பணப்பரிசும் சான்றிதழும்
கவிதைப் போட்டி (புதுக்கவிதை)
தலைப்பு : புதியதொரு விதி செய்வோம்
அளவு : A4 size 06 பக்கங்கள்
பரிசு : முதலாம் பரிசு 10000/= பணப்பரிசும் சான்றிதழும்
இரண்டாம் பரிசு 7500/= பணப்பரிசும் சான்றிதழும்
மூன்றாம் பரிசு 5000/= பணப்பரிசும் சான்றிதழும்
போட்டி விதிமுறைகள்
01. ரா.ப.சர்வதேசக் கல்வி வளாகத்தில் (Raapa International Campus) பயிலும் மாணவர்களோ அதன் ஊழியர்களோ மற்றும் அவர்களது உறவினர்களோ இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது.
02. ஆக்கங்கள் யாவும் டைப் செய்யப்பட்டு info@raapa.edu.lk மற்றும் raapa.edu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
Font : Kushpoo / Kalaham
Font size : 12
Format : Word / Pagemaker (Front page – JPEG)
03. ஆக்கத்தின் முதற் பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டு அனுப்பப்படல் வேண்டும்.
04. முதற்பக்கத்தில் போட்டியாளரின் முழுப்பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும்.
05. முதற்பக்கத்தின் கீழ்ப் பகுதியில் பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் தமது ஆக்கங்களை முறையே அதிபர் மற்றும் பதிவாளர் / உதவிப் பதிவாளர் ஊடாக பதவி முத்திரையுடன் உறுதிப்படுத்தி அனுப்புதல் வேண்டும்.
உதாரணம்: இது எமது பாடசாலையில் தரம் 12இல் கல்வி பயிலும் (மாணவனின் பெயர்) என்பவரின் சொந்த ஆக்கம் எனவும் இதுவரைக்கும் வேறு எந்தப் போட்டிகளுக்கோ பத்திரிகைகளுக்கோ இவ் ஆக்கம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதனையும் உறுதிப்படுத்துகிறேன்.
திறந்த போட்டியாளர்கள் சொந்த ஆக்கம் என உறுதி மொழி வழங்கி ஒப்பமிட வேண்டும்.
06. போட்டி முடிவு வெளியாகும் வரைக்கும் குறித்த ஆக்கம் வேறு எந்தப் போட்டிக்கோ அல்லது ஊடகங்களுக்கோ சமர்ப்பிக்கப்படக் கூடாது.
07. ஒரு போட்டியாளர் ஏதாவது ஒரு போட்டியில் (கட்டுரை அல்லது கவிதை) ஒரு ஆக்கத்தினை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
08. போட்டி விதிமுறைகளை மீறுவோரது ஆக்கம் எவ்வித அறிவித்தலுமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும்.
09. ஆக்கங்கள் அனுப்பப்படவேண்டிய இறுதித் திகதி: 05.08.2016
10. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

