கலாநிதி UL. அஹமத் அஷ்ரப் அப்துர் றஊப் மௌலவி என்னும் ஷைத்தானிய வாரிசுடைய அத்வைத பிரச்சாரத்தினால் கறைபடிந்துபோன காத்தான்குடியின் சில கருமையான பக்கங்களை இறைவனின் உதவியால் தன்னுடைய அறிவாற்றலின் துணை கொண்டு வெள்ளையடித்த பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரர் இவர்.
அத்வைத வழிகேடர் அப்துர் றஊப் மௌலவி விடுத்த விவாத அழைப்புக்களுக்கு பதில் வழங்க திராணியில்லாமல், அந்த வழிகேட்டுக் கொள்கையாளரை நேரடிக்களத்தில் சந்திக்கத்துணிவில்லாமல் காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா தொடக்கம் அகில இலங்கை ஜம்இய்யா வரைக்கும் அமைதி காத்துவந்த அவலகரமான காலசூழலில் களத்தில் கால்பதித்து அப்துர் றஊபினுடைய கொட்டத்தை தன்னுடைய அறிவின் பலம் கொண்டு அடக்கிய மாபெரும் பேரறிஞர் இந்த கலாநிதி அஹமத் அஷ்ரப்.
“எல்லாம் அவனே” என்பது அப்துர் றஊபுடைய வழிகெட்ட வாதமாக இருந்துவந்த அதேவேளை “அவனே எங்கும் ஏகமயமாக இருக்கிறான்” என்பது இவ்வூரின் மூத்த உலமாக்களின் முட்டாள்த்தனமான நம்பிக்கையாகவும் இருந்துவந்தது. அந்த சந்தர்ப்பத்தில் “இவையிரண்டுமே வஹியின் பார்வையில் வழிகெட்ட வாதங்கள், அழ்ழாஹ் அர்ஷின் மீது உள்ளான் என்பதே அல் குர்ஆனும் அண்ணலாரும் கூறிய இறையியல் கோட்பாடு” என்று இறைவனின் இருப்பிடத்தை துல்லியமான முறையில் துணிந்து அறிவித்ததோடு அதற்காக காத்தான்குடி ஜம்மியத்துல் உலமாவுக்குள்ளேயே பல எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் சந்தித்த ஏகத்துவ அறிஞர்தான் இந்த கலாநிதி அஹ்மத் அஷ்ரப்.
ஆனால் பரிதாபம், அண்மைக்காலமாக இவருடைய சிந்தனையில் உதித்த ஷைத்தானிய எண்ணங்களினால் அன்று அத்வைத வழிகேட்டுக்கெதிராக களமாடிய கலாநிதி அஷ்ரப் இன்று அத்வைத அந்த வழிகேடர்களையே தட்டிக்கொடுக்கின்ற அளவுக்கு மிகவும் தரந்தாழ்ந்த நிலைக்குச்சென்று கொண்டிருக்கிறார்.
கலாநிதி அஷ்ரப் அவர்களுக்கு இந்த இலங்கை நாட்டிலேயே எந்தவொரு மார்க்க அறிஞருக்கும் வழங்கியிராத அளவுக்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் பல அருட்கொடைகளை வாரி வழங்கியிருக்கிறான்.
அரபு மொழித்தேர்ச்சி, அரபு சூழலில் வாழ்கின்ற அந்த வட்டார அனுபவம், அரபு தேசமே தலை நிமிர்ந்து பார்க்கின்ற சவூதி அரேபியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகமான நஜ்ரான் பல்கலைக்கழத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் எனும் சிறப்புமிக்க கௌரவம் என அழ்ழாஹ் இவருக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் ஏராளம், ஏராளம்.
ஆனாலும் அந்த அருட்கொடைகளை இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்கின்ற, அதை இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துகின்ற எண்ணத்தை, சிந்தனையை அழ்ழாஹ் இவருக்கு கொடுக்கவில்லை என்பதை இவருடைய அண்மைக்கால நடவடிக்கைகளே சான்று பகர்ந்துகொண்டிருகின்றன.
இந்த கலாநிதி அஹமத் அஷ்ரப் பத்துவருடங்களுக்கு முன்னர் பலமாக அடித்த சாவு மணியால் மூர்ச்சையாகிக்கிடந்த அத்வைத நச்சுப்பாம்பானது இப்பிரதேசத்தின் அரசியல், அதிகாரவாத நயவஞ்சகர்களால் மீளவும் உயிர்பெற்று எழுந்துவந்து இந்த சமூகத்தை தினந்தோறும் தீண்டிக்கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய நகரமென்றும், மார்க்க அறிஞர்களின் உறைவிடம் என்றும் தேசிய சர்வதேச மட்டங்களில் மார்தட்டிப்பேசப்படுகின்ற காத்தான்குடி நகரம் இந்த அத்வைத சாம்ராஜ்ஜியவாதிகள் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்ற அடிமுட்டாழ்த்தனமான செயற்பாடுகளால் மாற்றுமத சமூகத்தின் மத்தியில் கூட மதிப்பிழந்து, கௌரவம் களைந்து தலிகுனிந்து நிற்கிறது.
இதன் பாரதூரத்தை நன்கறிந்த காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் அந்த அத்வைத நச்சுப்பாம்பினுடைய ஆபத்திலிருந்தும், மௌட்டீக சித்தாந்தங்களில் இருந்தும் மக்களை மீட்டெடுப்பதற்காக மிகவும் அர்பணிப்புடன் செயற்படத்துவங்கியது.
அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஏற்கனவே இந்த அத்வைதத்திற்கு எதிராக களமிறங்கிய மார்க்க அறிஞர் என்றவகையில் இந்த கலாநிதி அஷ்ரப் அதனை ஆரத்தழுவி, வாயார வாழ்த்தி வரவேற்றிருக்கவேண்டும். முடியாவிட்டால் கைகட்டி நின்று வேடிக்கைதானும் பார்த்திருக்கவேண்டும்.
ஆனால் அவற்றையெல்லாம் விடுத்து தானும் செய்யாது, செய்கின்ற மக்களையும் செய்யவிடாது “ஏதோவொன்றில் படுத்த ஏதோவொரு பிராணியை”ப்போன்று நடுவழியில் நின்றுகொண்டு நயவஞ்சகத்தனமான செயற்பாடுகளில் இறங்கி சமூகத்தை சீரழிக்க முற்படுவதை பார்த்துக்கொண்டு அந்த ஏகத்துவ சமூகத்தின் ஒரு அங்கத்தவன் என்ற வகையில் என்னால் அமைதி காக்கமுடியாதுள்ளது.
நபித்துவம் கிடைக்கப்பெற்ற நாள்முதல் கல்லடியும் சொல்லடியும் தாங்கியவண்ணம் நபிகளார் மேற்கொண்ட சுமார் பதிமூன்று வருட காலப்பிரச்சாரம் ஏகத்துவம் பற்றிய தெளிவூட்டலும் இறைமறுப்பு என்னும் வழிகேட்டைப்பற்றிய எச்சரிக்கையாகவுமே இருந்துவந்தது. அதன் பின்னரும் கூட நபிகளாருடைய மரணத்தருவாய் வரைக்கும் அந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை அவர்கள் நிறுத்திவிடவில்லை.
அந்த வகையில் ஏகத்துவப் பிரச்சாரம் என்பது இஸ்லாமிய தஃவா பணியின் அடித்தளமாகவே இருக்கின்றதென்றால் அது மிகையில்லை. அதுவும் காத்தான்குடி போன்ற அத்வைத வழிகேடுகளால் தாக்கமுற்ற, சிதிலமடைந்த பிரதேசங்களில் இந்த ஏகத்துவப்பிரச்சாரமும் அதற்கெதிரான கொள்கைகள் தொடர்பிலான விழிப்புணர்வுகளும் மிகவுமே அவசியமாகின்றன.
அந்த அவசியப்பாட்டை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரப்பிரச்சாரங்களின் பிரதிபலனாகத்தான் அத்வைத வழிகேட்டின் அடி ஆழத்தில் மூகிக்கிடந்த பல இஸ்லாமிய உறவுகள் இன்று தூய இஸ்லாத்தின் அடிப்படையை விளங்கியுணர்ந்து தங்களுடைய இம்மை, மறுமை வாழ்க்கையை சீரான வழியில் செப்பனிட்டுக்கொண்டு வருகிறார்கள்.
அவ்வாறு பரிசுத்தமடைந்த அதிகமான மக்களுடைய மீள் வருகையினால்தான் அத்வைத சாம்ராஜ்ஜியம் தற்போது வெகுவாக ஆட்டங்காண ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு இந்தப்பிரதேசத்திலிருந்து அத்வைத வழிகேட்டினை மண்டியிடவைத்த, இன்னமும் அதை மீளெழும்பாமல் அடக்கிவைக்க பாடுபடுகின்ற ஒரு ஏகத்துவ அமைப்பையும் அதன் பிரச்சாரகர்களையும் எந்தவொரு அடிப்படையும் விவேகமுமற்ற வகையில், தன்னுடைய வயதுக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் சற்றேனும் பொருந்தாத விதத்தில் இரண்டாந்தர வார்த்தைகளை, சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை, அறிக்கைகளை கிறுக்கல்களாக வெளியிட்டு தனது பெறுமானத்தை தானே குறைத்துக்கொள்ள முற்படுகின்ற கலாநிதி அஷ்ரப் அவர்களுடைய கீழ்த்தரமான செயற்பாடுகளை பார்க்கும் போது இவரிடம் மார்க்க அறிவை கற்ற ஒரு ஏகத்துவவாதி என்ற வகையில் வெட்கித்தலை குனிவதா அல்லது வேதனையடைவதா என்ற குழப்பநிலையில் இருந்துவருகிறேன்.
அந்த அத்வைத சாக்கடையில் இருந்து மீண்டுவந்து பரிசுத்தமடைந்த பல சகோதர்களே அவர்களுக்கு ஏற்பட்ட அந்த இழிநிலை ஏனையோர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தங்களால் முடியுமானவரைக்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருவதோடு ஏகத்துவ பிரச்சாரத்தில் ஈடு படுகின்ற அமைப்புக்களுக்கும் தங்களால் முடியுமான உதவிகளை மேற்கொண்டுவருவதை நாம் காண்கிறோம்.
ஆனால் இறைவன் வாரிவழங்கிய மார்க்க அறிவை உள்ளத்தில் சுமந்து, ஏகத்துவ அறிஞன் என்ற பெயர் நாமத்தை சூடி தன்னுடைய அறிவாற்றலால் பலரையும் ஈமானிய வட்டத்திற்குள் ஈர்த்தெடுக்கவேண்டிய கடமையையும் பொறுப்பையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த கலாநிதி அஷ்ரப் அவர்களோ அந்த அத்வைத முகாமுக்கே ஏகத்துவ பிரச்சாரகர்களையும் அமைப்புக்களையும் சமூக வலைத்தளங்களில் நாகரீகமற்ற வார்த்தைகளால் நயவஞ்சகத்தனமாக காட்டிக்கொடுக்கின்ற மிகவும் கேவலமான, இழிந்த செயற்பாடுகளை அரங்கேற்றிவருவது இப்பிரதேசத்தின், இந்நாட்டின் ஒட்டுமொத்த ஏகத்துவ சமூகத்தினாலும் கண்டிக்கப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
இந்த மாதம் அழ்ழாஹ்விடத்தில் மிகவும் சங்கை பொருந்திய புனித மிகு மாதமாகும். இம்மாதத்தை அடைந்தும் யார் அதை நல்லமல்களால் சிறப்பிக்கவில்லையோ அவன் நாசமாகட்டும் என்பது அழ்ழாஹ்வினதும் அவனது தூதரினதும் சாபமாக இருக்கிறது.
ஆனால் உள்நாட்டிலும் பல வெளிநாடுகளிலும் இஸ்லாமிய மார்க்க கல்வியை திறம்படக்கற்றுத்தேர்ந்த கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அவர்களோ இம்மாதத்திலும் கூட ஏகத்துவப்பிரச்சாரகர்களை வீணாக வம்புக்கிழுத்து தன்னுடைய ரமழான் மாத நற்கிரிகைகளை பாழடிப்பதோடு ஏனையோருடைய வணக்க வழிபாடுகளிலும் உளரீதியான இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய ஷைத்தானிய செயற்பாடுகளை மேற்கொண்டுவருவது எவ்வளவு தூரம் ஆபத்தானது என்பதை அவரும் அவரைச்சார்ந்த நபர்களும் சற்றேனும் சிந்திக்கவேண்டும்.
எனவே கலாநிதி அஹமத் அஷ்ரப் அவர்களிடம் நாம் மிகவும் கண்ணியமான முறையில் வினயமாக வேண்டிக்கொள்கின்ற விடயம் ஒன்றே ஒன்றுதான்.
கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அவர்கள் இந்த ஊரில் அத்வைதத்திற்கு எதிராகவோ அல்லது ஏனைய வழிகேடுகளுக்கு எதிராகவோ சிரமப்பட்டு எந்தவொரு பிரச்சாரத்தையும் மேற்கொள்ள வேண்டிய எதுவித அவசியப்பாடுகளும் கிடையாது.
ஆனால் எவ்வளவோ சவால்களுக்கும் அச்சறுத்தல்களுக்கும் நடுவில் தன்னுயிரையும் பொருட்படுத்தாது அத்வைதம் மற்றும் அதனோடு ஒட்டிய ஏனைய வழிகேடுகளை எதிர்த்தும் ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டவும் துணிவாகவும், தெளிவாகவும் களத்தில் நின்று பிரச்சாரம் செய்கின்ற ஏகத்துவ அமைப்புக்களை, உலமாக்களை “தொழிலில்லாத நாவிதன் பூனையை பிடித்து சவரம் செய்த கதை”யாக குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு சமூகவலைத்தளத்தில் நான்கு வரி பதிவுகளையிட்டு நலினப்படுத்தவேண்டாம் என்ற கோரிக்கையை இறுதியாக முன்வைக்கிறேன்.
அத்தோடு கலாநிதி அஷ்ரப் அவர்கள் “தானும் படுக்காது தள்ளியும் படுக்காது” இவ்வாறான தரந்தாழ்ந்த செயற்பாடுகளை தன்னளவில் மட்டுப்படுத்திக்கொள்ளாது இந்த சமூகத்தின் மத்தியில் தொடர்ந்தேச்சையாக மேற்கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கான மிகப்பாரதூரமான பின்விளைவுகளையும் வாழ்கையில் என்றோ ஒருநாள் சந்திக்கவேண்டிய மிகவும் துர்ப்பாக்கியமான சூழலுக்குள் தள்ளப்படுவார் என்பதையும் ஒரு முதற்கட்ட எச்சரிக்கையாக விடுக்கிறேன்.
மேலும் இந்த கலாநிதி அஷ்ரப் தன்னுடைய தரந்தாழ்ந்த கருத்துக்களை நாகரீகமான முறையில் யாரேனும் சுட்டிக்காட்டினால் கூட அவர்களை சமூக வலைத்தளத்திலிருந்து புறக்கணிக்கக்கூடிய நம்பிக்கையும் தைரியமும் இல்லாத ஒருவர் என்ற வகையில் என்னையும் அவருடைய முகநூல் நட்பு வட்டாரத்திலிருந்து பல மாதங்களுக்கு முன்னரே நீக்கியுள்ளார்.
எனவே இந்த கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள செய்திகளை சமூக நலன்விரும்பிகள் யாரேனும் முடியுமாக இருந்தால் அவரிடம் எவ்வழியிலாவது கொண்டுபோய் சேர்த்து விடுமாறும் வாசக சகோதரர்களை வாஞ்சையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

