அன்வர் முஸ்தபாவின் அழைப்பில் கிழக்கில் கால்பதித்த பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர்

Written By avathani Media Network on Sunday, June 5, 2016


(கலைமகன்)

சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா அவர்களின் அழைப்பை ஏற்று முதன்முறையாக கிழக்கு மாகாணத்திட்க்கு விஜயம் ஒன்றை மேட்கொண்டிருந்த இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சஹீல் ஹுசைன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேட்கொண்டிருந்தார். வைத்திய சாலையின் குறைபாடுகளை கேட்டறிந்த இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சஹீல் ஹுசைன் வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியின் குறைபாடுகளை பாக்கிஸ்தானிய அரசின் அனுசரணையுடன் நிபர்த்தி செய்துதர உள்ளதாக வாக்குறுதியளித்தார். 


இந்நிகழ்விவை தொடர்ந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பொலிவரியன் கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்து அங்கு இடம்பெற்றுவரும் கட்டிட நிர்மான பணிகளை பார்வையிட்டதுடன் அந்த பள்ளிவாசலின் விஸ்த்ரிப்பிட்க்கும் பாகிஸ்தானிய அரசின் அனுசரணையுடன் உதவிகள் செய்துதர உள்ளதாக அப்பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.


இவ்விஜயத்தில் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான சமாதான தூதுவர் அன்வர் எம் முஸ்தபா ,பிரதேச செயலாளர் ஏ.எல்.எம் சலீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.