“அழகியல் உணர்வுகளுக்கு உணவு” கலைக் கண்காட்சி

Written By avathani Media Network on Tuesday, June 21, 2016


கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நுண்கலைப் பட்டதாரியான செல்வி எம்.ஏ. நூருல் அஸ்மாஹ்வின் கை வண்ணத்தில் உருவான “அழகியல் உணர்வுகளுக்கு உணவு” கலைப் படைப்புக்களின் கண்காட்சி அண்மையில் கமு/கமு/ அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கமு/கமு/அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபரான யூ.எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியினை, கவிஞர் சோலைக்கிளி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். 


இக்கலைக்கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.