இடைநிறுத்தி வைக்கப் பட்டிருந்த லக் ஸ்ரீ அதி சொகுசு பஸ் மீண்டும் சேவைக்கு விடும் வகையில் இன்று 2016.06.01 இரவு ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.எஸ்.தௌபீக் இதனை ஆரம்பித்து வைத்தார். இந்த அதி சொகுசு பஸ் சேவை இரவு 10.30 க்கு "மூதூரில் இருந்து கிண்ணியா ஊடாக கொழும்பு " செல்வதற்கான நடவடிக்கையை தற்போது மக்கள் பாவனைக்காக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த பஸ் சேவை இதற்கு முன்னரும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறிது காலம் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



