(ஜுனைட்.எம்.பஹ்த்)
NTJ யின் சீதன ஒழிப்பு மாநாட்டில் நடைபெற்ற முக்கிய நான்கு நிகழ்வுகள்
நேற்று இரவு (06.05.2016)
காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) இனால் ஏற்பாடு செய்த சீதன ஒழிப்பு மாநாடு மாலைசுமார் 6:40 மணியளவில் ஆரம்பமானது.
“இஸ்லாமி திருமண ஒழுங்குகள்” எனும் கருப்பொருளில் மௌலவி M.Y.M தௌபீக் (பலாஹி) ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், இஸ்லாமிய திருமண ஒழுங்கு முறையை அழகாக விளக்கியதோடு திருமண விடயத்தில் சமுதாயத்தில் காணப்படும் நெறிபிறழ்வுகளையும் ஒவ்வொன்றாக விபரித்தார். அல்ஹம்துலில்லாஹ்!
இதையடுத்து
“வழக்கொழிந்து போன இஸ்லாமிய சொத்துப்பங்கீடும் வளர்ந்து வரும் வரதட்சணைக் கொடூரமும்” எனும் கருப்பொருளில் மௌலவி M.C.M ஸஹ்றான் (மஸ்ஊதி) இரண்டாவது உரையை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில்,ஒரு ஆண்மகன் திருமணம் செய்யும் போது பெண் தரப்பாரிடம் சீதனம் பெறுவதானது எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பதை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் விளக்கியதோடு மாத்திரமல்லாமல் சீதனம் என்ற இக்கொடுமையினால் வெளிநாடுகளில் எமது சகோதரர்கள் படும் இன்னல்களை திரையில் எடுத்துக்காட்டினார்.
அத்துடன் இந்த அறியாயமான சீதனத்தை சமுதாயத்தில் நியாயப்படுத்த முற்பட்டிருக்கும் சில புல்லுருவிகளையும் அங்கு அவர் அடையாளப்படுத்தினார்.
ஆண்,பெண் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இறுதியாக எமது மாநாட்டில் முக்கிய நான்கு நிகழ்வுகள் நடைபெற்றன.
முதலாவது நிகழ்வாக…
“என் வாழ்வில் சீதனமாக பணமோ வீடோ காணியோ வாகனமோ நகையோ சீர்வரிசைகளோ எதுவும் பெறமாட்டேன்” என்று இளைஞர்கள் எமது மேடையிலே ஏறி சத்திய வாக்கு அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இரண்டாவது நிகழ்வாக…
பெண்தரப்பாரிடம் சீதனம் பெறக் கூடாது என்ற எமது தீவிர பிரச்சாரத்தால் கவரப்பட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் எமது இந்த மாநாட்டிற்கு முன்னரே தாங்கள் வாங்கிய சீதனத்தை மீளக்கையளித்திருந்தனர்.
அவர்களையும் நாம் மேடையில் ஏற்றி சமுதாயத்திற்கு அடையாளப்படுத்தினோ
சீதனத்தை மீளக்கையளித்தவர்கள்
மூன்றாவது நிகழ்வாக…
ஜமாஅத் உறுப்பினர்களில் ஒருவரான M.A.M பைரூஸ் என்பவர் சீதனத்திலிருந்து மீளுவதற்கான முதற்கட்ட நிகழ்வாக தான் திருமணம் முடிக்கும் போது பெண்தரப்பாரிடம் பெற்ற வீட்டுத்தளபாட பொருட்களுக்குரிய தொகையாக இரண்டு லட்சத்து எண்பத்தி ஓராயிரம் ரூபா பணத்தை தனது மச்சினன் M.M ஷாகிரிடத்தில் சபையோர் சாட்சியாக ஒப்படைத்தார்.
நான்காவது நிகழ்வாக…
தற்போது சீதனத்தில் இருக்கும் சில சகோதரர்கள் எமது மேடையிலேறி எதிர்காலத்தில் சீதனத்தை மீளக்கையளிப்பதாக மக்கள் மன்றத்தில் பகிரங்க வாக்குமூலம் அளித்தனர்.
ஆக மொத்தத்தில் இந்த நான்கு நிகழ்வுகளும் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அங்கு அமைந்தது.
இன்ஷா அல்லாஹ்! எமது ஜமாஅத் தொடர்ந்தும் இது போன்ற சமூகப்பணிகளையும் மார்க்கப்பணிகளையும்மு பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாம் உங்களிடம் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.எல்லா வல்ல அல்லாஹ் எமது செயற்பாடுகளில் தூய்மையான எண்ணத்தை தந்தருள்வானாக!
நன்றி- ஊடகப் பிரிவு.
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்.





