(அஸ்ஹாபுல் கஹ்ப்)
கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பொது மக்கள் முன்னிலையிலும் , தனது ஆதரவாளர்கள் முன்னிலையிலும் சத்திய பிரமாணம் ஒன்றை செய்திருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயம்.
இது முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மற்றுமொரு சாதனை என்றே கூற வேண்டும். அதில் கூறப் பட்டிருந்த வாசகம் ஒன்றை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.
'இப்பதவி வழிமூலமாக கிடைக்கும் சகல கொடுப்பனவுகளையும், பொருளாதார நன்மைகளையும் தலைமைத்துவசபையின் தீர்மானங்களுக்கு அமைவாக பொதுப்பணிகளுக்காக செலவிடுவேன் என்றும் இத்தால் உறுதி கூறுகின்றேன். அத்தோடு இப்பதவி மூலமாகக் கிடைக்கும் சம்பளம், வாகன இறக்குமதிக் கோட்டா உள்ளிட்ட அனைத்தையும் எமது முன்னணியின் கோட்பாடுகளுக்கு அமைவாக மக்களின் நன்மைக்காகவே செலவிடுவேன்."
எனினும் அல்லாஹ்வின் நாட்டம் , அவர் தெரிவு செய்யப்படவில்லை அவ்வாறிருந்தும் அவர் இன்று ஒவ்வொரு மாதமும் பொதுப் பணிகளுக்காக செலவிடுகின்ற தொகை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் மாத சம்பளத்திலும் அதிகமானது. இந்த விடயம் பதவிக்கு வராமல் தான் கூறியதை நிறைவேற்ற முனைகிறாரா என்ற கேள்வியினை உண்டாக்குகிறது. அத்தோடு அவரது பெருந்தன்மையினை காட்டி நிற்பதுடன் , நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்களின் வாக்குறுதி பேணல் எனும் விடயத்தினையும் சாட்சி சொல்லி நிற்கிறது. வாக்களித்த மக்களை கைவிட்டுவிடக் கூடாது , அவர்களின் தேவைகளை தன்னால் முடிந்தளவு தூரம் நிறை வேற்ற வேண்டும் என்ற விடயங்கள் இங்கு பாராட்டப் படவேண்டியவை . அல்லாஹ் அவருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும் பரகத் செய்வானாக
ஆமீன்.
முஸ்லிம் அரசியல் வாதிகள் , அரசியலை தங்களுக்கு சார்பான கட்சிகளோடு சேர்ந்து வியாபாரமாக மாற்றியுள்ள சுழ்நிலையில் இவ்வாறு முன்மாதிரியான அரசியல் செயற்பாடுக
ள்
எதிர்கால இளைஞர் சக்திக்கு நல்லதொரு பாடமாக அமையும் என்பதில் எந்த வொரு சந்தேகமும் கிடையாது. .
சத்திய பிரமான இணைப்பு

