காங்கேயனோடை மற்றும் காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் இரத்தான முகாம்.

Written By avathani Media Network on Monday, May 2, 2016




எம்.ரி.எம்.யூனுஸ்

காங்கேயனோடை பிர்லியன்ட் சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் காங்கேயனோடை அல் அக்ஸா பாடசாலை மண்டபத்தில் இன்று 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிழவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் காத்தான்குடி தள வைத்தியசாலையுடன் இணைந்து இரத்த நன்கொடையாளர்களிடமிருந்து இரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

பிர்லியன்ட் சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவர் ஏ.டபுல்யூ.எம்.றூமி தலைமையில் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வில் ஒன்றிய அங்கத்தவர்களும் பொதுமக்களுமாக சுமார் 50 பேர் இரத்தத்தை தானமாக வழங்கி வைத்தனர்.

வைத்திய பரிசோதனையை காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எம்.எம்.அயாஸ் மேற்கொண்டார்.

அத்தோடு காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில்
இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெற்றது.

இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்கப் பிரச்சாரகர் ஸஹ்ரான் மஸ்ஊதி அவர்களும் ஜமாஅத் அங்கத்தவர்கள் பலரும் பங்கு கொண்டு இரத்தத்தை தானமாக 26 பேர் வழங்கினர்.

வைத்தியசாலையில் இரத்தத்தை சேமிக்கும் பக்கட் இல்லாத காரணத்தினால் பெருமளவிலான அங்கத்தவர்கள் இரத்தத்தினை தானமாக வழங்காது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்தியர் ஜனாபா நளீரா வைத்திய பரிசோதனையை மேற்கொண்டார்.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.