மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் கொடேகே விழாவில் தமிழ் எழுத்தாளர்கள்

Written By avathani Media Network on Wednesday, May 18, 2016






மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முகமாக கொடகே புத்தக நிறுவனமும் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்பானமும் இணைந்து நடத்தும் விருது விழா எதிர்வரும் மே 24ந் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் ஆனந்த சமரக்கோன் உள்ளக அரங்கில் நடைபெறும்.


பராறுமன்ற புனரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கயந்த கருணாநிலக தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பெரும் தொகை சிங்கள மூத்த எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவதோடு தமிழ் எழுத்தாளர்களான பெண் எழுத்தாளர் ஆனந்தி மற்றும் அந்தனி ஜீவா ,மேமன்கவி ஆகியோரும் கௌரவிக்கப்டுவார்கள்.

இவ்விழாவில் பேராசிரியர் ஜே.பீ. திஸாநாயக்க அவர்களும் எழுத்தாளர் திக்குவல்லை ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றுவார்கள்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.