(ஜுனைட்.எம்.பஹ்த்)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத் தொடரில்,
மே மாதத்துக்கான சொற்பொழிவு, 3ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 6.45 மணிக்கு 'தண்ணீர் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.
- குர்ஆன் தண்ணீருக்கு வழங்கியுள்ள முக்கியத்துவம்.
- நபிமார்களின் வரலாற்றில் தண்ணீரின் அற்புத வகிபாகம்.
- தண்ணீரின் முறையற்ற பாவனையால் ஏற்பட்டுள்ள சமூக பாதிப்புக்கள்.
- தனி மனித வாழ்வில் தண்ணீரின் பங்கு.
போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
இல 77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, பாதிஹ் நிறுவனத்தின் விரிவுரையாளரும், மாணவர் உள வள ஆலோசகருமான அஷ்ஷெய்க் மிஹ்ழார் ரஷீத் (நளீமி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதையும்
அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும்
இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு: 0766529128

