தெற்கு அதிவேகப் பாதையின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடைப்பட்ட பகுதியில் கட்டணம் இன்றி பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய சில பிரதேசங்களில் நீர் நிரம்பியுள்ள காரணத்தினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியுள்ளது.
இன்று காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினமும் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடைப்பட்ட பகுதியில் இலவச போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
(அத தெரண நிரூபர்)

