சவூதி அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் பேரீச்சம் பழம் அமைச்சர் ஹலீமிடம் கையளிக்கும் நிகழ்வு

Written By avathani Media Network on Thursday, May 12, 2016


(இக்பால் அலி)

சவூதி அரசாங்கத்தினால் வருடாந்தம் நோன்புக்காக இலவசமாக வழங்கப்படும் பேரீச்சம் பழம் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீமிடம் கையளிக்கும் நிகழ்வு அமைச்சரின் அலுவலகத்தில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கை சவூதி அரேபியா தூதுவராயலயத்தின் தூதுவர் முஹமட் அல் ஆப் அவர்களிகளினால் அமைச்சர் ஹலீமிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சவூதி அரேபிய்யாவின் நிதி அமைச்சரின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.