மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்- 85 வேலைத் திட்டங்களுக்கு 50.41 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு படங்கள்.

Written By avathani Media Network on Friday, May 13, 2016


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் 2016 இவ் வருடத்திற்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று 12 வியாழக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பிரதேச அபிவிருத்திக்; குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் ,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் ,கிழக்கு மாகாண சபை தவிசாளரும் , கிழக்கு மாகாண உறுப்பினருமான . என். இந்திரகுமார் பிரசன்னா , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா . துரைரெத்தினம் , கோவிந்தன் கருணாகரன் , ஞா . கிருஷ்ணபிள்ளை , எம் .நடராஜா உட்பட திணைக்களத் தலைவர்கள், பொலிசார்,அரச அதிகாரிகள் ,பிரதேச சபை,மின்சார சபை உள்ளிட்ட சபைகளின் அதிகாரிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த 2015ம் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2016 இவ் வருடத்திற்காக அனுமதிக்கப்பட வேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான அனுமதிகளுகம் வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்; குழுவினால் வழங்கப்பட்டது.

அத்தோடு 2016 இவ்வாண்டில் வவுணதீவு பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவுள்ள 85 திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் டீ.சீ.பி பன்முகப்படுத்தபட்ட வரவு செலவுத் திட்ட நிதி,சீ.பி.ஜி மாகாண சபை உறுப்பினர்களின் நிதி,வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான உட்கட்டுமான அபிவிருத்தி நிதி,கிழக்கு மகாண விவசாய அமைச்சின் நிதி,விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி, உட்கட்டுமான வேலைத்திட்ட கிராமத்துக்கான ஒரு வேலைத் திட்டம் உள்ளிட்ட நிதிகளின் மூலம் 50.41 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுணதீவு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிமலராஜ் தெரிவித்தார்.

இங்கு திவிநெகும திணைக்களம்,பிரதேச சபை,கல்வி,சுகாதாரம்,கால்நடை,கமநல கேந்திர நிலையம்,விவசாயத்திணைக்களம்,இலங்கை மின்சார சபை,வனவளத் திணைக்களம்,வன ஜீவராசிகள் திணைக்களம்,மீன்பிடித் திணைக்களம்,நன்னீர் மீன்வளர்ப்பு,நீர்பாசனம்,நீர்வழங்கள்,தெங்கு,போக்குவரத்து, வீடமைப்பு கைத்தொழில்,பொலிஸ் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.