7 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Written By avathani Media Network on Wednesday, May 18, 2016


எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு 7 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, நுவரெலியா, கண்டி, மற்றும் களுத்துறை ஆகிய 7 மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த மாவட்டங்களில் மண்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து வீழக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

ஆகவே இந்த நிலைமை குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.