சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய 4 மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் மண்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து வீழக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
ஆகவே இந்த நிலைமை குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுள்ளது.
மேலும், நாட்டில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழையுடன் கடுமையான காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் எனவும் மின்னலால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

