இரண்டு பிள்ளைகளின் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு

Written By avathani Media Network on Tuesday, May 10, 2016


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான சுமார் 38 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான பொலிஸ் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் 24-05-2016ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இன்று 10 உத்தரவிட்டுள்ளார்.


இரண்டு பிள்ளைகளின் தாயான மேற்படி பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் 25-04-2015 காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 26 திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்கள் இருவரையும் இன்று 10 செவ்வாய்க்கிழமை வரை 14 விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.


இந் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரனை இன்று 10 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களான விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் 24-05-2016ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.