இலவச உம்றா திட்டத்தில் 100 பேர் கொண்ட 3வது குழு இன்று பயணம்-படங்கள்.

Written By avathani Media Network on Thursday, May 19, 2016


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கதீப் மற்றும் இமாம்மார்களுக்கான இலவச உம்றா திட்டத்தின் 100 பேர் கொண்ட மூன்றாவது குழு இன்று 19 வியாழக்கிழமை சவூதி அரேபியாவின் புனித மக்கா நகர் நோக்கி புறப்பட்டது.

இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றது.

இதில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதுவரைக் காலமும் உம்றா அல்லது ஹஜ் கடமையினை நிறைவேற்றாத 55 வயதுக்கு மேற்பட்ட இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கு இலவசமாக உம்றா செய்வதற்கான வாய்ப்பினை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதற்கமைய தலா 100 பேர் கொண்ட முதலிரண்டு குழுக்களும் அண்மையில் உம்றா கடமையினை நிறைவேற்றி நாடு திரும்பியது.

இந் நிலையில் மேலும் 100 பேர் கொண்ட குழு இன்று புனித மக்கா நகர் நோக்கி புறப்பட்டதுடன் விரைவில்; மீதமுள்ள 200 பேரும் வழியனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.