காத்தான்குடி பொது விளையாட்டு மைதான புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு.

Written By avathani Media Network on Saturday, April 30, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கமைவாக 2,000,000.00 ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு காத்தான்குடி பொது விளையாட்டு மைதானம் பு
ர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.

விளையாட்டு மைதானத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக், காத்தான்குடி பிரததேச செயலாளர் எஸ்.எச்.எம். முஸ்ஸம்மில், பிரதேச செயலாகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன் மற்றும் நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

பொது விளையாட்டு மைதானத்தை எவ்வாறு முதற்கட்டமாக கிடைக்கப்றெ்றுள்ள நிதியைக் கொண்டு ப
ரமைப்ப தென்றும், வீரர்கள் விளையாடக்கூடிய வகையில் செப்பணிடுவதென்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அத்தோடு விளையாட்டு மைதானத்திற்கான விலைமனு கோரல் மதிப்பீட்டையும் மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் பணிப்புரை விடுத்தார்.

இம்மைதானத்தின் செப்பனிடும் பணிகள் இரண்டு மூன்று மாதத்திற்குள் முடிவுறும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.