நமது நாட்டைப் பொறுத்தவரை நமது மக்களின் இருப்பியல் பல்வேறு அச்சுறுத்தலுக்குள்ளும் ஹஆபத்துக்குள்ளும் உள்ளாக்கப்பட்டு காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணமாக அமைவது நமது மக்கள் குடியமர்ந்திருக்கும் பெரும்பாலான பகுதிகள் நமது மக்களின் அடர்த்தியைக் கொண்டல்லாமல் ஏனைய சமூகத்தினர்களால் சூழப்பட்டு இருப்பதினாலாகும். இதனால் குறித்த பகுதிகளில் பல்வேறு அடக்குமுறமைகளை நம்மீது அவர்கள் பிரயோகித்து வருவதும் மிகவும் வெளிப்படையானது.
நமது நாட்டில் காணப்படும் இருபத்துஐந்து நிர்வாக மாவட்டங்களிலும் நமது இருப்பியல் குடிகொள்ளப்பட்டிருக்கின்றது. இங்கெல்லாம் நாம் எதிர்கொள்கின்ற அச்சுறுத்தல்கள்இ பிரச்சனைகள் என்பதன் கோணங்கள் வெவ்வேறு முகங்களை கொண்டவைகளாகும். இது நாம் வாழும் சூழலில் எம்மை சுற்றி வாழும் பெரும்பான்மை சமூகங்களான சிங்களஇ தமிழ் மக்களின் எம்மீதான பிழையான அனுகுமுறமைகளினால் ஏற்படுத்தப்படுகின்ற விரிசல்களாகும்.
இதற்கு அப்பால் நமது நாட்டில் அமைகின்ற அரசாங்கம் செயல்படுத்த முனைகின்ற இனவாத சிந்தனைகளின் பாகுபாட்டுத்தன்மைகளினாலும் நம்மீதான குரோத மனப்பாங்குகளும்இ அச்சுறுத்தல்களும் வளர்ந்தோங்குவதற்கு வழியேற்படுத்துகின்றது. இவ்வாறான ஈனச்செயல்களினால் நாம் நிம்மதியற்ற ஒரு வாழ்வு முறமைக்குள் நாம் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
நம் நாட்டில் நாம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளின் மையங்களாக அமைகின்ற வீட்டுத்திட்ட பகிர்ந்தளிப்புஇ நில பங்கீடுகள்இ மீன்பிடித்துறைஇ விவசாயக்காணிகள்இ மேய்ச்சல் தரைகள்இ மீள்குடியேற்றம்இ வேலைவாய்ப்பு புறக்கணிப்புஇ பதவி உயர்வுகள்இ நிர்வாக பதவிநிலை என இப்படி எதுவானாலும் அவை இடத்துக்கு இடம் மாறுபட்டதாகவும் வேறுபட்டதாகவும் அமைகின்றது. இதனால் நாம் பல்வேறு அசௌகரியங்களை சுமக்க வேண்டியவர்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
அரசாங்க ரீதியாக எம்மீது தொடுக்கப்படுகின்ற அத்துமீறல்கள் நேரடியாகஇ தொடுக்கப்படுகின்றது என நாம் விளங்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக அரசியல் அதிகாரமுடையவர்களின் ஏவலாளிகள் ஊடாக தூண்டப்பட்டுஇ நாம் துவம்சம் செய்யப்பட்டும் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டும் வாழும் இக்கட்டான நெருக்கடியான ஒரு நெருக்குவாரத்துக்குள் அகப்படுத்தி சிறுமைப்படுத்தப்பட்டும் வருகின்றோம்.
இவ்வகையான இடரல்களை நிவர்த்திக்கும் வகையில் நமது மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டிய அவசியத்தை எம்மீது அவசியப்படுத்திவைக்கின்றது. என்றாலும் இது குறித்த அக்கறை இல்லாத ஒரு சமூகமாக நாம் சொரணையின்றி வாழ்வதே நமது வழமையாக கொண்டிருக்கின்றோம். இது நாம் எல்லோரும் கவலைப்படவேண்டிய ஒன்றாகும்.
நமது கவனங்கள் இதன் மீது படியாதவரை நமது வாழ்வுமுறமையிலும் நமது சந்ததிகளின் எதிர்காலத்திலும் எத்தகைய எழுச்சிகளை நோக்கிய பயணத்திற்கு நாம் வித்திட்டவர்களாக மாறாத அதேநேரம் நமது சந்ததிகள் அடிமைகளாக மாறுவதிலிருந்து மாறுதல் அடைய முடியாத ஒரு இருக்கமான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படும் அபாயம் இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தட்டினால் திறக்கப்படும் என்பது போல் நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நாம்தான் தேடவேண்டும். அதனை சரியாக இனம்கண்டு அடைந்துகொள்வதற்கான முன்னகர்ச்சிகளையும் நாம்தான் முன்னெடுக்க வேண்டும்.. மாறாக மௌனிகளாக - பேசாமடந்தைகளாக நாம் இருக்கும் வரை நம்மீதான அடக்குமுறமைகள் ஓயப்போவதில்லை. உரமாகவும் முறைப்பாகவும் அடர்ந்தேறுதல்கள் திட்டமிட்டு கையாளப்படும் நிலைப்பேற்றுக்குள் நாம் உள்ளாகி கையறு நிலைகொண்ட சமூகமாக நாம் காட்சியளிப்பதிலிருந்தும் நாம் மாறப்போவதில்லை.
நமது இருப்பியல்இ வாழ்வுமுறைமை என்பனவற்றை கருத்தில் கொண்டுதான் எமது எந்த தேவைகளும் ஈடேற்றப்படவேண்டியிருக்கின்றது. இந்த அவதானத்தின் மீதான நமது கவனக்குவிப்பு பதிகின்ற போதுதான் நாம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தீர்ந்து கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
உண்மையில் நாம் வாழுகின்ற ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படுகின்ற வேறுபட்ட பிரச்சனைகளுக்கு அவ்வப்பகுதிகளில் வாழும் மக்களின் பிரதிநிதிகள் மாத்திரமே முன்னிலைப்படுத்தி பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் குரல் கொடுப்பதினால் எந்தவிதமான முன்னேற்றங்களையும் நாம் அடைந்து கொள்வதை தூரமாக்கி வைக்கவே உதவி வந்திருக்கிறது.
இதனால் நாம் அனுபவிக்கின்ற அவலங்கள் நாளுக்குநாள் அதிகரித்து பெருகியும் வந்திருக்கின்றது. இந்த அனுபவங்களில் நின்று நாம் சிந்தித்து மாற்றுவழிகளை நமக்குள் ஏற்படுத்துவதின் ஊடாகவே நமது இருப்பியல் கேள்விக்குறியதாக மாறாது ஒரு நம்பகத்தன்மையில் காலூண்றிக்கொள்வதற்கு வழியாகும்.
இந்த அடிப்படையில் நாம் சிந்திப்பதற்கு அண்மையில் அரசஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் 'கரையோர மாவட்டம் பற்றி அரசாங்கத்திடம் பிரஸ்தாபிப்பதற்கும் அதனை கேட்பதற்கும் நாம் முன்வரமுடியாதுள்ளது. ஏனெனில் அங்கு எமது கட்சிக்கென்று ஒரு பிரதிநிதியை அம்மக்கள் தேர்ந்துதர தவறிவிட்டனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்க்கிரஸிற்கே அதிகப்படியான வாக்குகளை அம்மக்கள் அளித்து மூன்று பிரதிநிதிகளை பெற்றிருக்கின்றனர். இதனால் இப்பிரச்சனையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் முன்னிலைப்படுத்தி செயற்படவேண்டும். அவர்களுக்கு நாம் ஒரு பின்புலமாக இருந்து காரியமாற்ற இயலும். மாறாக நாம் இதனை நமது தலைமையில் முன்னெடுக்க முடியாது'. என்ற கருத்துப்பட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தெரிவித்திருப்பதன் மூலம் இரண்டு செய்திகளை நமது சமூகம் நோக்கி ஆணித்தரமாக அறைகின்ற ஒரு கோணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 01. எந்த மாவட்டத்தில் குறித்ததொரு கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை இருக்கின்றதோ அவர்கள்தான் அப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும். 02. நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாத பிரதேசத்து நமது மக்களின் பிரச்சனைகளை தட்டிக்கேற்க முடியாது. இவ்வாறு தெரிவித்ததில் இருந்து இக்கூற்று சரியா அல்லது பிழையா என்ற பகுப்பாய்வுக்கு அப்பால் நமது சிந்தனைகளை பின்வருமாறு நகர்த்திச்செல்வதற்கு உந்துதல் தருகின்றது.
நமது நாட்டில் நாம் இருப்பியல் கொண்டிருக்கும் குடியமர்தலுக்கும் நமது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் களநிலவரங்களுக்கும் ஏற்றவகையில் எமது மாற்றுத்தீர்வுகளை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு சுமத்தியிருக்கின்றது. அந்த வகையில் நின்று மேற்படி அமைச்சரின் கருத்துரையை ஆழமாக நோக்கினால் அந்தந்த பிரதேசங்களுக்காக அதாவது முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்துப் பிரதேசங்களிலும் இருந்து நமக்கான மக்கள் பிரதி நிதிகளை அடைந்து கொள்ள முடியாத சங்கடமே உள்ளது. இத்தகையோர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு யார் முன்வருவது என்கின்ற கேள்வியும் இவிடத்தில் எழுப்பாதிருக்க முடியாது.
தேர்தலில் போட்டியிடுகின்ற போது முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒரே கூட்டணியாக இணைந்து போட்டியிடுவது ஒரு சாத்தியமான நடவடிக்கையல்ல. இதற்கு இரண்டு காரணங்களாகும். ஒன்று நமது மக்கள் பிரதி நிதிகளை தெரிவு செய்யும் வகையில் பல மாவட்டங்களில் நமது வாக்காளர் தொகை அமைந்திருக்கவில்லை. மற்றொன்று நமது நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடிய பெரிய கட்சிகளிலும் நமது மக்கள் பிரதிநிதிகள் தெரிவாக வேண்டிய அவசியம் இருக்கின்றது.
இந்நிலைகளின் காரணமாக தேர்தலுக்காக கூட்டமைப்பொன்றை நமது தனிக்கட்சிகள் அமைத்துக்கொள்வதில் நடைமுறைச்சிக்கல் இருந்தாலும் தேர்தலின் வெற்றியின் பின்னர் நமது தனிக்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரட்சி கொள்ள செய்வதும் ஏனைய பெரிய கட்சிகள் உட்பட பிரதிநிதித்துவம் பெற்ற நம்மவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவதில் எந்தவிதமான சிக்கல்களோ பிரச்சனைகளோ இருப்பதாக தெரியவில்லை.
ஆயினும் தமது தலைமைத்துவங்களுக்கு இடையில் குடிகொண்டிருக்கும் நீயா? நானா? என்கின்ற போட்டி மனப்பான்மை களையப்பட்டால் இவ்வொன்றினைவு மிக இலகுவாக சாத்தியமாகிவிடும். அதே நேரம் பல சாதனைகளையும் நம் பக்கம் இழுத்து வந்து சேர்த்துவிடுவதையும் இது எளிதாக்கிவிடும்.
ஒன்றிணைவின் போது யாருடைய தலைமைத்துவத்தின் கீழ் இயங்குவது என்பதில் நாம் பிரச்சனைப்படத் தேவையுமில்லை. இதனை இலகுவாக தீர்க்கும் வகையில் எமது தனிக்கட்சிகளில் எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் இருக்கின்றதோ அந்த கட்சியின் தலைவரும் அரசாங்கமாக அமைந்திருக்கும் கட்சியின் வெற்றிபெற்ற நமது மக்கள் பிரதிநிதியும்இ இனைத்தலைமைகளாக செயற்படும் முடிவுக்கு இந்த விடயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியும்.
இந்த ஒன்றிணைந்த கூட்டமைப்பு நாடுதழுவிய நமது பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதற்கான நிவாரண வழிகளையும் தேடிக்கொண்டு சமூக நலன் சார்ந்த தமது பிரதி நிதித்துவ இருப்பியலை தக்கவைத்துஇ தமது கடமையையும் பொறுப்பையும் சரிவர நிறைவேற்றிக்கொள்வதற்கான ஒரு பொறிமுறைக்குள் வந்துவிட வழியாகும்.
இந்த அரசியல் கட்சி ஒன்றிணைவை அவர்களின் இஷ்டத்திற்கு ஏற்ப செயல்பட அனுமதிப்பதை விடவும் இவர்களுக்கான ஒரு அமுக்கக்குழுவாக நமது மக்களின் பெரும் அங்கீகாரத்தை பெற்றிருக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை கடமையாற்ற துணியவேண்டும். இந்த துணிவை அவர்களுக்கு மக்களாகிய நாம் வழங்க வேண்டும் அல்லது நிர்ப்பந்திக்க வேண்டும்.
உலமா சபை என்பது நமது மார்க்கத்தின் வழிகட்டிகளைக்கொண்ட ஓர் அமைப்பாகும். அரசியல்இ சமூகநலன் என்ற வகையில் செயற்படுவதற்கு மிக உரித்துடையவர்களாகவும் இவர்களை நாம் நோக்க வேண்டும். ஏனெனில் இவ்விரு அம்சமும் இஸ்லாம் கூறுகின்ற அறநெறிகளுக்கு புறம்பானது அல்ல.
இதனை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது முக்கியமான ஒரு கேள்வியாகும். அதற்கு பின்வருமாறு விடைதேடிக்கொள்ள முடியும். நமது நாட்டில் பரந்து காணப்படும் புலமையாளுமைச் சமூகங்களின் ஒரு குழுவை உள்ளடக்கியதாக குடியல் சமூக அமைப்புக்களை ஒரு சம்மேளனமாக உருவாக்கி நாம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளை அனுகிநுனுகி ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்துக் கொள்ள முடியும்.
நாடு தழுவிய பல கிளைகளைக்கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளையும் இந்த குடியல் சமூக அமைப்பிற்குள் உள்வாங்கிக்கொண்டும் செயற்படுகின்ற போது இங்கு எட்டப்படுகின்ற பெரும்பாலான சமூகநலன் சார்ந்த தீர்மானங்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் கையளிப்பது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நமது மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைவுக்கூட்டமைப்பிற்கு இவ்விடயங்களை சிபாரிசு செய்து இதனைப்பெறுவதற்கான அரசியல் அழுத்தங்களை அவர்கள் பிரயோகிப்பதற்கும் முன்னெடுப்பதற்கும் இவர்கள் தூண்காளாக அமைய வேண்டும்.
நமது மக்கள் பிரதிநிதிகளின் ஒன்றிணைவு கூட்டமைப்பு பிரதிநிதிகள் பெற்ற மாவட்டங்கள் ஆயினும் பெறாத மாவட்டங்கள் என்பதை கவனத்திற்கொள்ளாதுஇ பொதுவாக நமது மக்கள் எதிர்கொள்கின்ற எந்த பிரச்சனை ஆனாலும் அது எந்தப் பிரதேசமனாலும் அதனை கருத்திற்கொண்டு ஒன்றித்த குரலாக ஒரே தீர்வாக ஒருமித்து கோருகின்ற சூழ்நிலை உருவாகும்.
இந்த இயங்குதளத்தை சரியாக உருவாக்கிக்கொண்டால் நமது மக்களின் அவலங்களைஇ அச்சுறுத்தல்களை நிவர்த்திக்கும் வழி திறந்துவிட்ப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கின்றது என் கின்ற எதார்த்தத்தின் பக்கம் நாம் மீளவேண்டும். அதுவே நமக்கு பல சாதகங்களையும் ஆரோக்கியங்களையும் அடைந்து கொள்வதை சமீபமாக்கி வைக்கும்.
ஒன்றிணைந்த சமூகங்களின் போராட்டங்கள் பெரும்பாலும் தோற்றதாக வரலாறு பதிவாக்கவில்லை. வெற்றியடைவதை சில இடங்களில் நீண்டகாலங்களை எடுத்துக்கொண்டதை நாம் மறுப்பதற்கில்லை. அதற்காகவேண்டி இம்முறைமை தோற்றுப்போன ஒருவழிமுறையாக கணிக்கப்பட்டு கைவிடப்படவும் இல்லை.
இதற்கு ஓர் உதாரணமாக நாம் இரண்டு அரசியல் கட்சிகளை எடுத்துக்கொள்ள முடியும். இரா. சம்பந்தன் தலைமையில் இயங்குகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் மனோ கனேசனின் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை எடுத்து நோக்கலாம். இவ்விரு கட்சிகளில் இருக்கின்ற பல்வேறு பட்ட கட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளை கொண்டிருந்தாலும் அக்கட்சி சார்ந்த மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஒன்றிணைந்த ஒரு கோணம் இதற்குள் உள்ளது.
தேர்தல் வெற்றியை பிரதான குறியாகக்கொண்ட ஒரு கூட்டிணைவாக மேற்குறித்த இரு கட்சிகளையும் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு நிலை இருந்தாலும் அதற்கு அப்பால் அவை இன்று தமது சமூகத்தின் பிரச்சனை குறித்து குறிப்பாக இனப்பிரச்சனை தீர்வுஇ அரசியல் அமைப்பு மாற்றம்இ போன்றவற்றில் மும்முரமாகவும் ஒரேதளத்திலும் நின்று செயற்பட்டுக்கொண்டிருப்பதை மிகப்பிரத்தியட்சமாக நாம் பார்க்கக்கூடியதாக உள்ளது.
ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடியுங்கள் என நமது வழிகாட்டியின் முதன்மை மூலமான அல்-குர்ஆன் நம்மை நோக்கி அறைகூவல் விடுத்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் சரியாக செவிசாய்ப்பவர்களாகவும் நமது நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை ஒரு கட்டாய கடமையாக நமக்கு சொல்லித்தந்திருக்கிறது. நமது மக்கள் பிரதிநிதிகள் இதற்கு விதிவிலக்காக வாழக்கூடாது. அந்த அடிப்படையில் நாம் ஒன்றிணைந்து வாழ்வதில் அதிகரித்த கரிசனைகளை மேற்கொள்பவர்களாக மாறியே ஆகவேண்டும்.
இவ்வாறு நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வழிமுறையில் நமது பிரச்சனைக்கான தீர்வுகள் நெருக்கம் கொண்டிருக்கின்ற போதுஇ அதனை மறுதலித்து பிளவுண்ட நடைமுறைக்குள் நம்மை தஞ்சமடைய வைப்பது நமக்கும் உகந்ததல்லஇ நமது மக்களுக்கும் நன்மைபயக்காது. ஆகையால் நமக்கும் நமது மக்களுக்கும் பாரிய நன்மைகளை தரக்கூடிய ஒன்றிணைந்த வாழ்வில் நாம் சங்கமிக்கின்ற போது ஒருமித்த குரல்கள் ஒருமித்த முடிவுகள் அங்கே காணப்படுவதென்பது நமக்கு அந்நியமாகிவிடது.
நமது தனிக்கட்சிகளின் பிரவேசமானாலும் சரிஇ பெரிய கட்சிகள் உட்பட்ட ஏனைய கட்சியென்றாலும் சரி இவற்றின் ஊடாக மக்கள் பிரதிநிதிகளாக வருவதற்கு தம்மை தயார் படுத்திக்கொண்ட நம்மவர்களிடம் பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையாக இருக்க வேண்டிய பண்பு ஒன்றுதான் நமது மக்களுக்காக நாம் சேவையாற்றுவது அல்லது நமது மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பது. இந்த இலக்கில் வந்த நாம் அந்த இலக்கை எய்துவதற்கு எவை தடையாக இருந்தாலும் அதனை கட்டுடைப்பு செய்துகொள்ள வேண்டிய நமது முதற்பணியை புறக்கணித்துவிடக்கூடாது.
இதனை அடைந்து கொள்வதற்காக நாம் எதனையும் இழக்கலாம். ஆனால் நமது மக்களுக்கான நமது சேவை என்பதை மட்டும் எக்காரணம் கொண்டும் தொலைத்துவிடக் கூடாது. இந்த உறுதித்தன்மையை நாம் இயலவே இங்கு உதாரணமாக சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்புஇ தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற இரு கட்சிகளின் தலைப்புக்களிலேயே பார்க்க கூடியதாக உள்ளது. தமிழ் என்பது அவர்களிடம் மொழியை மட்டும் குறிப்பதல்ல. அந்த மக்கள் குழுமத்தையே பிரதிபலிப்பதாகும்.


