பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு புதிய மாணவர்களை இணைத்தல்.

Written By avathani Media Network on Tuesday, April 5, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

பேருவைளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் 9ஆம் 10ஆம் திகதிகளில் காலை முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நேர்முக எழுத்துப் பரீட்சைகள் வடக்கு, வட மத்திய, வட மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 09.04.2016 சனிக்கிழமையும் தெற்கு, ஊவா, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10.04.2016 ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 0342276338, 0776504765, 0773573815 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அதன் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தெரிவித்துள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.