புத்தாண்டு மகிழ்ச்சியில் சிறுமி மீது வல்லுறவு! ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் கைது

Written By avathani Media Network on Tuesday, April 19, 2016


புத்தாண்டு தினத்தன்று சிறுமியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் ராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் கடந்த 14ம் திகதி குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியொருத்தியுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் புத்தாண்டு தினத்தில் சிறுமியை சந்திப்பதற்காக கலென்பிந்துனுவெவ சென்றுள்ளார்.

அதன் பின்னர் குறித்த சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு இளைஞர் தப்பிச் சென்று விட பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞர் அநுராதபுரம் மாவட்டத்தின் மஹ இலுப்பள்ளமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், 28 வயதான அவர் ராணுவத்திலிருந்து தப்பியோடி வந்து தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.