காத்தான்குடி கால்நடை இலவச வைத்திய முகாம்.

Written By avathani Media Network on Tuesday, April 19, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கால்நடை இலவச நடமாடும் வைத்திய முகாம் 2ம் கட்டமாக காத்தான்குடி குபா பள்ளிவாயல் வளாகத்தில் இன்று 19.04.2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

ஆடு,மாடு,கோழி,முயல் போன்றவற்றிற்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் மருந்துகளும் பன்னையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
வளர்ப்பு முறை தொடர்பான ஆலோசனைகளும் 
காத்தான்குடி கால்நடை வைத்தியர் லிங்கேஸ்வரன் ருஜித்ரா அவர்களினால் பன்னையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.முபாஸிர் கலந்து கொண்டார். 
பெருமளவிலான பன்னையாளர்கள் நடமாடும் இலவச வைத்திய முகாமில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.